சைக்கோ படத்தை பார்க்க ஆரம்பித்தது முதல், மிஸ்கின் மேல் சின்னதாக கோவமிருந்தாலும், இறுதியில் Written & Direct By Misskin என நிறுத்திக் கொண்டதில் அந்த கோவமில்லாமல் போயிருந்தது.
கொரிய தாக்கத்துடன், இந்திய மக்களுக்கு Pshyco Thriller படத்தை கொடுக்க வேண்டுமென்கிற கட்டாயத்தில் படமாக்கியதாகத்தான் இந்த சைக்கோ திரைப்படம் இருக்கிறது. நிறைய இடங்களில் தமிழ்நாட்டுக்கு கொடுக்கின்ற படம் என்பதில் குழப்பமும், இயக்குனராக தன்னை நிரூபிப்பதாகவும் படத்தை எடுக்க முற்சித்திருக்கிறார்.
குறிப்பாக, நடிக்கத் தெரியாத உதயநிதியை, நீ படத்தில இரு. உனக்கு நடிக்க வராது எண்டு எனக்கு தெரியும். அதுபோல, நீ நல்லா நடிச்சது போல காட்டவும் எனக்கு தெரியுமென தன்னை நிரூபித்திருக்கிறார். உதயநிதியை பார்வையற்றவராக காட்டியதிலேயே பாதிக்கிணறு தாண்டி விட்ட மிஸ்கின். காதல் காட்சியில் Wide shot, Closeup shotல் முகத்தை மறைக்கும் கண்ணாடி, அழும் காட்சியில் முகத்தை முழுக்க மறைச்சிட்டு பக்கவாட்டா திரும்பி, தோளை குலுக்கி உனக்கு என்னவருதோ அத பண்ணு, நான் இளையராஜாட BGM வாங்கி பாக்கிறவனுக்கு நீ அழுகிற எண்டு புரிய வச்சுக்கிறன் எண்டு உதயநிதியை வச்சு செய்ஞ்சுருக்கிறார் நம்மவர். இதெல்லாம் தெரியாம அந்த மெண்டல் நான் நல்லா நடிச்சுருக்கன், அதுக்கு மிஸ்கின்தான் காரணமெண்டு ஒவ்வொரு YouTube channelஆ அளந்துட்டு இருக்கு! 😬
இளையராஜா-மிஸ்கின் கூட்டணி Divine. பாடல் + BGM படத்துக்கு பக்கபலம். ஏன் உதயநிதிக்கே கையில் வச்சிருக்கும் குச்சியைவிட இந்த ஆள் இசைதான் பலம். வழமையான மிஸ்கினின் படத்தில்வரும் Trademark பாடல்தான் மிஸ்ஸிங். அதை இந்த படத்தில் வைக்கவும் முடியாது.
படம் முழுவதும் அழகான பெயர்கள். இரசிக்கக் கூடியதாகவிருந்தது. அத்தோடு, படத்தின் rawவான கதாபாத்திரங்களும் கதைக்கு சரியாகவிருக்கிறது.
நாடகங்களின் தாக்கம் மிஸ்கினிடம் நிறைய இருக்கிறது. Flashback காட்சியை ஒரு நாடகபாணியில் சொல்லியிருப்பார். அது, வழமையாக அந்த நுளம்புத்திரி சுருள் போட்டு சொல்லும் Flashbackயை விட வீரியமானது (புரிகிறவர்களுக்கு!).
கிளைமேக்ஸ் தமிழ் நாட்டுக்கானது என்பதனால், அதனில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. குறை சொல்வதற்க்குமில்லை. இந்த இடங்கள்தான், தன் படைப்பை ஒரு Art Formatல் முழுமையாக வெற்றிமாறன் போல மிஸ்கினால் தரமுடியாமல் போவதற்க்கு காரணமாக இருக்கிறது போலும்!
Pshyco - சினிமாவை அக்குவேறு ஆணிவேறாக கற்றுகொள்ள நல்ல புத்தகம் 😉

Comments