எல்லா ஜில்லாவிலும் தல ஹீரோ


வீரம் படத்தின் கதையை நானே பிறந்தபிறகு இதுவரைக்கும் 120 தடவையாவது தமிழ் சினிமாவில் பார்த்திருப்பேன்! அப்போ, எனக்கு முந்தி பிறந்தவங்க எல்லாம் எத்தனை தடவை பார்த்து இருப்பீங்க ? இருந்தாலும், படம் சூப்பர் டூப்பர் ஹிட். எப்படி மாப்பு ? அதுதான் சிறுத்தை “சிவா” செய்திருக்கும் அதிசயம்.

அஜித்குமார் படம் எல்லாம் குடும்பத்தோட பார்த்து எத்தனை காலம் என்று, பெருமூச்சு விடுபவர்கள் எல்லோருக்கும் பதில் சொல்லியிருக்கிறது இந்த திரைப்படம். கோட் சூட் அணிந்து கொண்டு, வீரமாய் நடந்துகொண்டு பஞ்ச் வசனம் பேசிக்கொண்டிருந்தவரை கூட்டி வந்து, வேட்டி, சட்டை போட்டு காமடி களத்தில் விளையாட விட்டு இருக்கிறார்கள். மனுஷன் கலக்கி இருக்கிறார். (இரண்டு பாடல் காட்சியில் நம்ம வயித்த கலக்குறார் என்றது வேற கதை)

படத்தின் ஹீரோ அஜித்குமார் என்று சொல்வது பொருத்தமில்லை! கதையே இல்லாமல் படத்தை வைத்தகண் எடுக்காமல் பார்க்க வைத்த சிறுத்தை சிவாவையே ஹீரோ என்று சொல்லலாம். திரைக்கதையின் வேகம், அண்ணன் தம்பி பாசம், சந்தானம், சிவா படத்துக்கே உரித்தான வில்லன் என்று முதல் பாதிக்கதை நகர, இரண்டாவது பாதியில், அண்ணன் தம்பி பாசம், வேறு வில்லன், சந்தானம் , ஹீரோயின் குடும்பம், போதாக்குறைக்கு தம்பி ராமையா. இதுக்கு பிறகும் படம் எப்படி இருக்கும் எண்டு கேட்கவா வேணும் ?

தம்பி ராமையா + சந்தனாம் + அஜித்தின் தம்பிகள் பண்ணும் அளப்பறைக்கு தியேட்டரே அதிருகிறது. அஜித் நின்று நிதானித்து பேசும் ஒவ்வரு பஞ்ச் வசனத்துக்கும் தியேட்டர் கதிகலங்குகிறது. ஆக்சன் காட்சியில் உயிரை துச்சமென மதித்து ரிஸ்க் எடுக்கும் காட்சியில் ஒவ்வருவர் மனதும் பதைபதைக்கிறது. (இப்படி ரிஸ்க் எடுக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம்பா) இதுக்கு மேலே, ஒரு ரசிகனுக்கு என்ன வேணும் ?

வீரம் திரைப்படம் தமிழில் தமன்னாவுக்கு மட்டுமல்ல! பறவை முனியம்மாவுக்கும் ரீ-எண்ட்ரீ! (?) அவரை பார்த்ததுமே, விசில் பறப்பது, தூள் படத்தில் அவரது “சிங்கம் போல” பாடலை யாரும் மறக்கவில்லை என்பதற்கு ஒரு சான்று!

இனிமேல், தேவி ஸ்ரீ பிரசாத்தை பிண்ணனி இசையமைக்க மட்டும் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். போட்ட பாடல்களில் ஒன்று இரண்டு பாடல்கள் திரையில் தேறுகிறது. பிண்ணனி இசை கதையை நகர்த்துகிறது. இதைவிட, இவர் அஜித்துக்கு போட்ட டூயட் பாடல்கள்தான் கொடுமை! இதுதான் படத்தின் ட்விஸ்ட்! மறக்காமல் போய் பாருங்கள்!

அஜித்தை பொறுத்தவரையில், பொங்கலுக்கு “அட்டகாசமான” ஹிட் தந்து இருக்கிறார். அண்மைக்காலத்தில் வெளியான ஒரே மாதிரியான திரைப்படங்களிலிருந்து வெளியே வந்திருக்கிறார். ரசிகர்கள் “குடும்பமாக” கொண்டாட இது போதும்.

வீரம் – தலக்கு மட்டும் J

Comments

Nanjil Siva said…
நம்ம தல... தலதாம்ல!!!