வீரம் + ஜில்லா
திரைப்படத்திற்கு அப்படி என்ன பெரிய திரைவிமர்சனம் எழுதிட போறாங்க ? இது என்ன
இரேண்டுமே உலக சினிமாவா ?
மண்டையை குடைஞ்சு, தமிழ் அகராதியில
வாரத்தையை தேடி எழுதிறதுக்கு, இரேண்டுமே டெம்ளேட் சினிமா தானே! அப்போ விமர்சனமும்
டெம்ளேட்டாத்தானே இருக்கும். அது உங்களுக்காக –
வீரம்
அஜித் சார் பாவம்! படம்
முழுக்க நடந்துகிட்டே இருக்கிறாரு. அடுத்த படத்திலையாவது அவரு நடிக்கணும்.
அஜித் நடக்கிறதாலதான்
என்னமோ, அவரை சுத்தி
இருக்கிறவங்க எல்லாம் படத்தில ஓடுறாங்க, பறக்கிறாங்க, சாவுறாங்க, நடிக்கிறாங்க.... ஆனா, இவரு மட்டும் நடந்துகிட்டே வசனம் பேசுறாரு.
இவருக்கு எல்லாம்
எதுக்குப்பா பாட்டு ? நரைச்ச முடியில
அப்பாவும், மகளும் போல
இருக்காங்க. படத்தோட பேசிக்கே தப்பா இருக்குதே.
தேவி ஸ்ரீ பிரசாத் இசை, எப்படித்தான்
தியேட்டர்ல மட்டும் நல்லா இருக்குதோ தெரியல.
அண்ணனை சுத்தி தம்பிமார்
பீத்திகிட்டே இருக்காங்க,
அண்ணன் தம்பிமாரை
பத்தி சொல்லிக்கிட்டே இருக்கிறாரு. கதையை மட்டும் சொல்லமாட்டேன் என்கிறாங்க.
ஒருவேளை வீரம் ஆக்சன்
படம் எண்டு யாரும் தப்பா நினச்சுற கூடாது எண்டதுக்காக, சந்தானம் மற்றும்
அப்புக்குட்டி ஆகியோரை வைச்சு காமடியும் பண்ணி இருக்காங்களாம்.
ஆக மொத்தத்தில தல
நடக்கிறாரு, தமன்னா வழமைபோல
பைத்தியம் பிடிச்ச ஹீரோயின் போல திரியுது. படமும் அதுபாட்டுக்கு முடிஞ்சு போகுது!
ஆரம்பம் ஹிட் எனும்போதே, இந்த படத்த பத்தி
சந்தேகபட்டது சரியா போச்சுது!
ஜில்லா
விஜய் சார் பாவம். படம்
முழுக்க ஆடிக்கிட்டே இருக்கிறாரு. அவரு அடுத்த படத்திலையாவது நடிக்கணும்.
விஜய் ஆடிகிட்டே
இருக்கிறதாலதான் என்னமோ, அவரை சுத்தி
இருக்கிறவங்க எல்லாம் படத்தில ஓடுறாங்க, பறக்கிறாங்க, சாவுறாங்க, நடிக்கிறாங்க.... ஆனா, இவரு மட்டும் சூரிக்கிட்ட சொல்லி பஞ்ச் வசனம் பேசுறாரு.
மோகன்லால் இருக்கிரார்தானே!
நாம காஜல் கூட குஜால் பண்ணலாமோ எண்டு தம்பி தப்பா புரிஞ்சுகிட்டுது போல!
சுறாவுல வடிவேலுவையே
ஹீரோவா நடிக்க வச்சவரு! மலையாள மாமிகளுக்காக மோகன்லாலை கூட கதாநாயகனாக
நடிக்கவைக்கமாட்டாரா என்ன ?
விஜய் நடிக்கிறதால இத
காமடி படம் எண்டு முடிவு பண்ணிறகூடாது என்பதுக்காக, சூரி பங்கேற்கும் ஆக்சன் காட்சிகளும் உண்டாம்.
ஜில்லா என்கிற பெயரை வச்ச
ஒரே குற்றத்துக்காக படத்தில ஹீரோயினை “ஜில்” லா காட்டியிருக்கிறது எல்லாம் ரொம்ப ஓவர்.
இந்த படத்தில எல்லோருமே
நடிக்கிறாங்க. ஆனா, கதையை மட்டும்
காட்டவே மாட்டன் எண்டு சொல்லக்கூடாது என்றத்துக்காக, விஜய் அப்பப்போ, ‘நான் எல்லாம் காட்டு காட்டு எண்டு காட்டுவேன்
தெரியுமா ?” எண்டு “ஹீரோயினை” பார்த்து வசனம்
பேசுகிறார்.
இறுதிக்காட்சிகளில் விஜய்
சிரிச்சுகொண்டே அழும காட்சிகளில் சிவாஜிகணேசனை மறுபடி மறுபடி நினைவுபடுத்துகிறார்.
இறுதியாக. ஜில்லா
விஜய்க்கு மறுபடியும் ஒரு சுறா.
இப்படித்தான் நிறையப்பேரு, நாளைக்கு முதல்
காட்சி பார்த்திட்டு விமர்சனம் எழுதலாம் எண்டு இருப்பாங்க! அவங்க எல்லாம் இதையே Copy பண்ணி
வச்சுக்குங்க! படம் பார்த்து முடிஞ்சதும், ஆங்காங்க மானே, தீன், பொன்மானே எண்டு எழுதிக்கொள்ளுங்க!

Comments