டேவிட் என்கிற கலை(?)ப்படம்


டேவிட் திரைப்படம் பார்த்து பலநாள் ஆச்சு! ஆனாலும், இவ்வளவு கதையிருக்கும் போது, ஏன்டா இந்த கதையை படமா எடுத்தாங்க? ஏன்டா இந்த திரைப்படம் பார்க்க வந்தோம்? என்ற ஒரு உணர்வு இந்த திரைப்படம் பார்த்த பிறகு வந்ததால் தான் விமர்சனமும் இவ்வளவு தாமதமாக வருகிறது. J

எவ்வளோ டபுள் ஹீரோ திரைப்படங்கள் பார்த்து இருப்போம். ஆனால், நிச்சயம் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு டபுள் ஹீரோ திரைப்படம் பார்க்கவே முடியாது. படத்தில் விக்ரம், ஜீவா இருவருமே ஒரு காட்சியை தவிர, வேறு எங்குமே சந்தித்து இருக்கமாட்டார்கள். ஆனால், அவர்களை மையபடுத்தியதாகத்தான் திரைப்படம் இருக்கும். ஒரு கதை 1999ம் ஆண்டில் மும்பையில் நடக்கும். மற்றையது, 2010ல் கோவாவில் நடக்கும் கதை. இரண்டு கதைகளங்களையும் வேறுபடுத்தி கையாள வேண்டிய சூழ்நிலையில் கையாண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே, 12B போன்ற திரைக்கதைகள் மக்களுக்கு புரியாமல், தோல்வியடைந்தவை. அந்த வகைக்குள் இதுவும் அடங்கி போகும் என்றே எதிர்பார்க்கலாம். கதை என்று பார்த்தால், படத்தில் எதுவுமே இல்லை என்று முழுமையாக சொல்லிவிட முடியாது. இருப்பதே ஒரு குட்டி கதை. எனவே, இப்படியே தொடர்ந்து சொல்லப்போனால், இந்த பதிவிலேயே சொல்லிவிடலாம்.  எனவே, அதை தவிர்த்து விடுவோம்.

படத்தை இயக்கியிருப்பவர் பியேஜ் நம்பியார். மணிரத்தினத்தின் உதவியாளர் என்று வேறு சொன்னார்கள். படத்தை பார்க்க போகும் போது கூட, “குருவை மிஞ்சிய சீடன்” என்று, சொன்னார்கள். அந்த அர்த்தம் படம் பார்த்த பிறகுதான், அவர் அவர் பார்வையை பொறுத்து விளங்கும். படத்தில் அடுத்த சிறப்பம்சம், படத்தில் 6 இசையமைப்பாளர்கள் என்று போட்டு இருந்தார்கள். ஒரு வேளை, ஒவ்வருவரும் தங்கள் திறமையை ஒவ்வரு பாடலில் வழங்க, 6 வித்தியாசமான ஹிட் பாடல்களை பெறலாம் என்றே எண்ணத்தில் 6 இசையமைப்பாளர்களை படத்துக்கு அழைத்து இருப்பார்கள் போல, ஆனால், இறுதியில், மனதில் நிற்பது “விக்ரம் குரலில் மரியா பிட்சாச்சே மற்றும் கார்த்திக் குரலில் மனமே” என்கிற பாடல்கள் மட்டுமே! மற்றபடி, எதுவுமே ஈர்க்கவில்லை. படத்தை கொஞ்சமாவது பார்க்க வைத்திருப்பது ஒளிப்பதிவாளர்கள்தான். இன்றைய கோவா மற்றும் அன்றைய மும்பை ஆகியவற்றை சிறப்பாக, கண்ணுக்கு குளிர்ச்சியாக படமாக்கி இருந்தார்கள். ஜீவா வறுமையில் விழுந்த ஹிட்டார் கலைஞன் என்பதை காட்டுகின்ற ஷோட்களின் உருவாக்கம் என்னவோ, இயக்குனர் கைவண்ணமாக இருந்தாலும், அதற்கு வடிவம் கொடுத்திருப்பவர்கள் ஒளிப்பதிவாளர்தான். படத்தில் என்னுமொரு விஷேடம் இயக்குனரை தவிர, மற்ற வேலைகளுக்கு எல்லாம் ஒன்றுக்கு மேற்படவர்களையே பயன்படுத்தி இருக்கிறார்கள். இயக்குனர் வேலைக்கும் என்னுமொருவரை சேர்த்து கொண்டிருக்கலாம்.

திரைப்படத்தில் எக்கசக்கமான நடிகர்கள் பட்டாளமே இருக்கிறது. ஹிந்தி மற்றும் தமிழில் திரைப்படத்தை வெளியிடுவதால், இரேண்டிலுமே தெரிந்த முகங்களாக பார்த்து படத்துக்குள் உள்வாங்கி இருக்கிறார்கள். நாசரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. விக்ரம் என்னை பொறுத்தவரை வீணாக்கபட்டு இருக்கிறார் என்றே சொல்லலாம். நடிக்க கூடிய ஒரு நடிகருக்கு படம் முழுக்க நடிக்காமலே இருக்க வேண்டும் என்கிற அடிப்படையிலான ஒரு கதாபாத்திரம் விக்ரமுக்கு, அதுபோல, நடிக்கவேண்டிய கதாபாத்திரம் ஜீவாவுக்கு, இருவருமே சிறப்பாக செய்து இருக்கிறார்கள். இவர்களை தாண்டி, நிறைய பேர் இருந்தாலும், விக்ரமின் இறந்த அப்பாவாக வருபவர் மனதில் நிற்கிறார். நல்லாவே, நடித்து இருக்கிறார். படத்தில் வாய்பேச முடியாத அழகியாக வரும் ஹிந்தி நடிகையின், நடிப்பும் அபாரம்! மிக சிறப்பாக, இயல்பாக நடித்து இருக்கிறார். பாராட்டபட வேண்டியவர். படத்தில் பல இடங்களில் சோர்ந்து போகும்போது, ஆவியான இவரும் விக்ரமும் பேசிகொள்ளும் இடங்கள்தான் உங்களை காப்பாற்றும். அதுபோல, ஜீவாவின் கதைக்களம் மிகசிறப்பாக செதுக்கபட்டிருக்கிறது, ஜீவாவுக்கு ஆறுதல் கூறும் கணவனை இழந்த கதாபாத்திரம் ஒன்று, படத்தில் இருக்கிறது. கொஞ்சம் மீறினால் அந்த காட்சிகளின் அர்த்தபடுத்தல் வேறுமாதிரியாகிவிடும் என்ற நிலையில், மிகசிறப்பாக காட்சிபடுத்தி இருக்கிறார்கள்.
காட்சி, காட்சியாக சொல்லப்போனால், அழகான திரைப்படம்தான் டேவிட். ஆனால், தமிழ் ரசிகர்கள் ரசிக்கின்ற அளவுக்கு, அவர்களை ஈர்க்க கூடிய வகையில் கதையை புதிய களத்தில் அமைக்க தவறிவிட்டார் பிஜேய் நம்பியார். ஹிந்தியில், மூன்று டேவிட்களை மையபடுத்தியதாக படத்தை உருவாக்கி இருக்கிறாராம். அதையும் முடிந்தால் பார்த்து பிறவி பயனை பெறுங்கள். ஆனால், தமிழில் டேவிட் எல்லோரையும் கவரக்கூடிய வகையில், அமைய பெறவில்லை என்பது, ஏமாற்றமே!

சொல்ல மறந்துவிட்டேன்! படத்தில், பல இடங்களில் கிறிஸ்தவ மதத்தை சுற்றியதாகத்தான் திரைப்படம் இருக்கும். காரணம், இரு ஹீரோகளுமே கிறிஸ்தவர்கள். பல இடங்களில் கிறிஸ்தவ மதத்துக்கு எதிரான நச் வசனங்களை வைத்து இருக்கிறார்கள். பார்க்கபோனாள, தடைவிதிக்கபட வேண்டிய படம்தான். மதவெறியர்கள் யாருமில்லை என்பதால், நாங்கள் பார்த்துகொண்டிருக்கிறோம் என்று திரையில் பார்க்கும் போது, ஆச்சரியபட்டு போவீர்கள்.

டேவிட் – தமிழ் சினிமா ஏமாற்றபட்ட புதிய பாதை


SportsKalam இணையதளத்துக்காக எழுதிய கிரிக்கெட் ஆக்கங்களை இங்கே பகிர்ந்து இருக்கிறேன். தவறவிட்டவர்கள், வாசித்து பாருங்கள்.


அணித்தலைவர் கிரேம் ஸ்மித் - வரலாற்றில் ஒருவர்




Comments