விஸ்வரூபம் என் மனதில்............

விஸ்வரூபம் திரைப்படம் ஆரம்பிக்கபட்ட காலத்திலிருந்தே படம் பற்றிய செய்திகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. இவற்றை எல்லாம் பற்றி பேச முன் ஒரு விடயம் சொல்ல வேண்டும். நான் ஒன்றும் கமல் ரசிகனும் இல்லை, முஸ்லீம் நண்பர்களுக்கு எதிரானவனும் இல்லை. சாதாரண வாழ்க்கையில், அசாதாரண விடயங்களை கொஞ்சம் அக்கறையுடன் பார்ப்பவன் என்ற ரீதியிலான எனது கண்ணோட்டமே இது!

விஸ்வரூபம் என்பது முதலில் திரைப்படம் என்ற ஒன்று மட்டும்தான் என்று, எதிர்பாளர்களுக்கு பலவிதத்தில் புரியவைத்து திரைப்படத்தை வெளியிடுவதற்கான திகதியாக, ஜனவரி 25ம் திகதியை அறிவித்திருந்த போதும், சில இந்திய இஸ்லாமிய அமைப்புக்கள் அந்த படத்தை தடைசெய்ய கோரி, மிக மிக அவசரமாக குறுகிய காலஇடைவெளிக்குள் சிறப்பாக செயல்பட்டு இருந்தன. அதை பார்த்து, இலங்கையிலும், வான்கோழி போன்று, இலங்கை இஸ்லாமிய அமைப்பும் திரைப்படத்தை திரையிட தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்தியாவை பொருத்தவரை, இந்து-இஸ்லாமிய பிரச்னை மிக தீவிரமானது, பயங்கரவாதமும் – மதமும் இணைத்து பலசந்தர்ப்பங்களில் பார்க்கபட்டே வந்திருக்கிறது. அந்தவகையில், அவர்களின் எதிர்ப்பு என்பது அமைந்திருக்கிறது. அதில், நிறையவே, அரசியல் முலாம் பூசபட்டு..... இலங்கையிலிருக்கும் எங்களுக்கு அப்படி என்ன வந்தது? திரைப்படத்தை தடைசெய்வதற்கு என்றுதான் விளங்கவில்லை.

இலங்கையில் உள்ள இஸ்லாமிய மதஅமைப்புக்களை சேர்ந்தவர்கள் என்னும் விஸ்வரூபம் திரைப்படத்தை பார்க்கவும் இல்லை. பின்பு, எதன் அடிப்படையில், திரைப்படத்துக்கு எதிர்ப்பை வெளியிடுகிறார்கள்? என்றுதான் புரியவில்லை. இந்தியாவில் பார்த்தவர்கள் எதிர்கிறார்கள் என்ற அடிப்படையில், திரைப்படத்தை இஸ்லாமிய மத அமைப்புகள் இந்தபடத்தை தடைசெய்ய விரும்பினால், அவர்களுக்கு இஸ்லாமிய பிரதமரை கொண்டிருக்கும் மலேசியா என்கிற நாடு கண்ணுக்கு புலப்படவில்லையா? அங்கு, திரைப்படம் தணிக்கை குழுவால், எந்தவகையிலும் காட்சிகள் நீக்கபடாமல், வெளியிடபட்டிருக்கிறதே? இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?
சினிமாக்கள் என்னமும் இலங்கையில், வெறுமனே சினிமாக்களாகவே இருக்கிறது. அது சமூகத்தின் உடையில், பழக்கவழக்கத்தில், சிகையலங்காரத்தில் மட்டுமே மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர, உங்கள் உங்கள் வரலாறுகளிலும், தொன்மையான உணர்வுகளிலும் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். கமல் என்கிற சாதாரண கலைத்துறையாளனால், வெறுமனே மூன்று மணிநேரத்தில் எல்லோர் மனங்களையும் மாற்றி, முட்டாளாக்கி விடமுடியாது அல்லது நம்பிக்கைகள் மீது அதிர்வலைகளை உண்டுபண்ணி விட முடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே!

உண்மையான காரணங்களுக்காக நாங்கள் போராட தயாரில்லை. எங்களுடைய உரிமைகளும், உங்களுடைய வரலாற்று சின்னங்களும் அழிக்கப்படும் போதும், வெறுமனே கைகட்டி, வாய்பொத்தி நிற்கிறோம். ஆனால், எங்கோவிருந்து வணிகம் செய்ய விரும்பும் ஒருவனுக்கு இலவச விளம்பரம் செய்ய தயார் ஆகிவிட்டோம் அல்லவா? உண்மையை சொல்லுங்கள், படத்தை தடைசெய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்த பின்னர், உங்களில் எத்தனை பேர் இந்த படத்தை DVDகளில் பார்க்க தயாராக இருக்கிறீர்கள்? உங்களில் எத்தனை பேர் தடையுத்தரவு விலகிய பின்னர், பார்க்க தயாராக இருப்பீர்கள்? உங்களில் எத்தனை பேர் VIP SHOWவுக்கு தயாராக இருக்கிறீர்கள்? பிறகு, எதற்கு தடை என்று உங்களையும் நீங்கள் விளம்பரபடுத்தி கொண்டு, விஸ்வரூபம் திரைப்படத்துக்கும் இலவச விளம்பரம் தருகிறீர்கள்?

இந்த விடயத்தில் கமல் என்கிற நடிகனை, நான் ஆதரிக்கிறேன்! மிக சிறந்த நடிகன் என்பதை தாண்டி, மிக சிறந்த வணிகவியலாளன் என்கிற நிலையை அவர் பெற்று இருக்கிறார் என்று சொல்லலாம். விஸ்வரூபம் படத்தில் அப்படி என்ன _ _ _ தான் இருக்கிறது என்று ஒவ்வருவரையும் திரயரங்குக்கே வரவைக்க கூடிய வகையிலான, உச்சமான விளம்பரத்தை பெற்று இருக்கிறார் என்று சொல்லாம். இதை கமல் எதிர்பார்த்ததுதான். ஆனால், திரைப்படம் அளவுக்கு, விளம்பரமும் விஸ்வரூபமாக இருக்கும் என்று எதிர்பார்த்து இருக்கமாட்டார். உண்மையில் அவரது விஸ்வரூபம் திரைப்படத்தின் “இவன் யாரென்று புரிகிறதா?” பாடல் வரிகளுக்கு அவர் மட்டுமே சொந்தகாரனாக இருக்க முடியும். J

நிச்சயமாக, திரைப்படம் திரையிடபட வேண்டும். அப்போது, நீங்கள் சொல்வது போன்று, அவமதிப்பை அல்லது எதிர்மறை கருத்துக்களை கமல் தன்னுடைய படத்தில் கொண்டிருந்தால், அவரை நீதிமன்றத்துக்கே அழையுங்கள் தவறில்லை. ஆனால், உங்கள் நலனுக்காக எதையும் செய்துவிடலாம் என்று இதையும் செய்து விடாதீர்கள். நிறைய விடயங்களை ஆழமாக பேசலாம். அவை, எம்மை வேறு எங்கோ அழைத்து போய்விடும்.

இறுதியாக, இது எப்படி?

பல்லு இருக்கிறவன் பகோடா சாப்பிடுறான். பணம் இருக்கிறவன் பிளைட் பிடிச்சு போய் படம் பாக்கிறான். J

Comments

Vathees Varunan said…
:)
படைப்புக்கள் என்பது அதுசார்ந்த மக்களிடையே அதிர்வுகளை ஏற்படுத்தவேண்டும் அப்படி அதிர்வுகளை ஏற்படுத்தாதவை படைப்புக்களே அல்ல.

ஆனால் படத்தினை தடை செய்திருப்பதானது படுமுட்டாள்த்தனம் மற்றும் கண்டிக்க வேண்டியதொன்று.
Anonymous said…
விஸ்வரூபம் திரை படத்தை தடை செய்தது மிக மிக சரி , ஒரு திரை படம் வெளிவந்து நாட்டின் சமூக நல்லிணக்கம் பதிக்க பட்டு அமைதி கெட்டு மக்கள் வாழ வேண்டிய சூழல் உருவாக்கு மேயானால் கமலை போன்ற கலை கூத்தாடிகளின் பதிப்பாய் எல்லாம் மனதில் எண்ணாமல் நாட்டின் அமைதியை நிலை நாட்ட தடை விதிபதி மிக சரியாகும். இதை தான் இன்று டேம் 999 படத்திற்கு உச்ச நீதி மன்றம் தீர்ப்பாக கொடுத்துள்ளது.

முதலில் ஒன்றை நாம் தெளிவாக விளங்கி கொள்ளவேண்டும் , இந்தியா நாட்டில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் . அவர்களை தவறுதலாக சித்தரிப்பது சமீபகாலமாக அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அவர்களின் புனிதமாக நினைப்பவற்றை கேவல படுத்தினால் யாருக்கும் கோபம் வரத்தான் செய்யும் கமல் தனக்கு எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்க உரிமை உண்டு என்றால் எடுத்து அவர மட்டும் பார்த்து கொல்லட்டும்.

இந்தியை பொறுத்தவரை இந்து முஸ்லீம் என்ற ஒரு விஷயம் மிக மிக சென்சிடிவான விஷயம் .ஏற்கனவே நிறைய மத கலவரங்களால் எண்ணற்ற மனித உய்ரிகளை காவு கொண்ட விசயம் , இதை தெரிந்து கொண்டே மீண்டும் அந்த விஷயம் பூதாகரம் ஆக கூடாது என்பதுதான் அனைத்து இந்திய மக்களின் எண்ணமும் , அதுதான் நல்லிணக்கம்.

இவை அனைத்தும் தெரிந்து கொண்டே பெரிய மேதாவி என்று தன்னை எண்ணி கொண்டிருக்கும் கமல் ஹாசன் இதை கையாண்டிருப்தே மக தவறு. வேறு கதைக்கலாமே இந்தியாவில் அவருக்கு இல்லையா?

சினிமா என்பது ஒரு வலிமையான மீடியா எளிதில் பாமர மக்களை சென்றடையும் வலிமை அதனிடம் உண்டு . சினிமாவை சினிமாவ பாருங்கள் என்று மேதாவிகளின் கூக்குரல் இடுகிறார்கள் , பாமர மக்கள் சினிமாவை உண்மை என்றே நம்ம்பு கிறார்கள் , ஆதலான் தான் எம்ஜியார் போன்றோர் இன்னும் மக்கள் மனதில் நிலைத்து உள்ளனர் . ஒரு பொய்யான விஷயத்தை தொடர்ச்சியாக் ஒவ்வொரு படத்திலும் விதைக்கும் பொது எதிர் வரும் சந்ததி இனருக்கும் அந்த விஷயம் உண்மை என்றே பழகி விடும்.

கமல் எதார்த்தமாக இந்த படத்தை எடுத்ததாக தெரியவில்லை வேண்டுமென்றே இஸ்லாமியரை கேவல படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்தால் தான் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்ற எண்ணத்தில் முன் கூட்டியே இதை டிடிஎச் இல் விற்க பார்த்துள்ளார் அங்கயும் இவருக்கு அஷ்டமா சனி வேலையே காட்டி விட்டான் ஒன்னும் போணியாக வில்லை .

யாரும் எல்லா படத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. ஒரு படம் ஓர் பெரும் சமூகத்தை பாதித்து அவர்கள் மனதை புண் படுத்து கிறது என்று உணரும் பொது எதிர்ப்பு வலு வடிகிறது. ரஜினி இன்றளவும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் அவர் இது வரை எந்த படத்திலாவது எதாவது ஒரு சமூகத்தை தாக்கி , கேவல படுத்தி நடிதிருகிறாரா?
ஏன் அவர் படம் வெற்றி பெறவில்லையா ?அந்த அறிவு ஏன் கமல்லுகு இல்லை. அப்போ கமல் மனதில் விஷம் இருபது ஊர்ஜிதமாக தெரிகிறது.

இந்த படம் வெளிவந்தால் இந்த படத்தை பார்க்கும் மற்ற சமூக நண்பர்கள் இந்த படத்தை முன்னுதாரணமாக வைத்து கொண்டு இஸ்லாமிய புனிதங்களை கிண்டல் செய்வார்கள் இதனால் கலவரங்கள் ஏற்படும் அமைதி நிச்சயம் கெடும். நல்லிணக்கம் பாதிக்க படும் .

இவற்றை அனைத்தும் உணர்ந்த கமல் அவர்களுக்கு வேறு கதைக் களமே கிடைக்கவில்லையா..?

இஸ்லாமிய புனித விஷயங்களை கேவலமாக சித்தரித்து தான் நீங்கள் படம் எடுத்தது சம்பாரிக்க வேண்டுமா?

சீக்கியர்களை பற்றி கேவலாமக் படம் எடுத்து பஞ்சாப்பில் வெளியிட உங்களுக்கு தைரியம் இருக்கா ?

சிவா லிங்கம் , ஐயப்பன் உருவான கதைகள் புராணத்தில் உள்ளன அந்த கேவலங்களை படமாக எடுத்து வெளியிட கமல் சார் ஏன் முன் வரவில்லை.?

குஜாரத் கலவரத்தில் மோடியின் பங்கை படமாக எடுக்க தைரியம் இருக்கா?

Unknown said…
இதில் வேறு சதி இருப்பது போல் தெரிகிறது.சொந்த பணம் போட்டு எடுக்கும் கமல் இவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்க மாட்டார்.அமெரிக்கனுடைய பணம் என்றே நினைக்கிறேன்.இவர் அடிக்கடி அமேரிக்கா செல்வதும், இவருடைய அமெரிக்க மோகமும் நாடறிந்ததே.இவ்வளவு நாளாக முற்போக்குவாதியாக அறிவு ஜீவியாக காட்டிக்கொண்டவர் சமீபகாலமாக அமெரிக்க அடிவருடியாக மாறியதன் நிர்பந்தம் என்ன ? சொந்த பணமாக இருந்தால் முஸ்லீம்களுக்கு படத்ததை காண்பித்து இருக்க மாட்டார். துப்பாக்கி குழு போல் ஒன்று இரண்டு காட்சிகளை வெட்டிவிட்டு ஒரு வருத்தத்தை தெரிவித்துவிட்டு படத்தை வியாபாரம் செய்திருப்பார்.இன்றுவரை அப்படி இறங்கியும் வரவில்லை. அதே போல் இவருடைய டிடிஹெச் முயற்சியும் சந்தேகத்தை கிளப்புகிறது. டிடிஹெசில் வந்த அடுத்த இரண்டு மணி நேரத்தில் பளிங்கு போல பிரிண்ட் எடுக்கப்பட்டு திருட்டு டிவிடி சந்தைக்கு வந்துவிடும் என்பது கமலுக்கு தெரியாதா என்ன ? ஆனால் இவர் சொன்ன காரணம் என்ன.. திருட்டு டிவிடி யை ஒழிக்கத்தான் இந்த முயற்சி என்று ? யார் காதில் பூ சுற்ற பார்கிறார் ? அவருடைய நோக்கம் அதுவல்ல. அவருடைய நோக்கம் அதிகப்படியான மக்களிடம் விரைவாக கொண்டு போய் இந்த நச்சு விதையை (அமெரிக்கன் விரும்பியப்படி) சேர்த்துவிட வேண்டும் என்பதுதான். ஒரு டிக்கட்டையே ஆயிரம் ரூபாய் கொடுத்து ப்ளாக்கில் வாங்கும் ரசிகன் இதை வாங்கிவிடுவார்கள் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டார். அப்படி வாங்கும் (மடையன்) 52 இன்ச் எல் ஈடி டிவி இல்லாத பாமர ரசிகன் என்ற உண்மை அவருக்கு தெரியவில்லை. 52 இன்ச் டிவி உள்ளவனுக்கு(புத்திசாலிக்கு) டொரண்டை பற்றி நன்றாக தெரியும். அவன் வாங்கவே மாட்டான்ன் என்றும் புரியவில்லை.அந்த படத்தில் கமர்சியல் விஷயங்களே இல்லை. ஒரு டாக்குமென்ட்ரி போல் தான் செல்கிறதாம் கூட்டி கழித்து பாருங்கள் கணக்கு கரெக்டா வரும். விஸ்வரூபம் படத்தில் வருவது போல் இவரை அரசு உளவு பார்த்தால் படத்தில் வரும் திகிலான திடீர் திருப்பங்கள் போல உண்மையிலும் நிகழலாம்.

தெளிவு பண்ணாமல் விடுப்பட்டது...
சாதரணமாக படம் வெளிவந்து அதனுடைய கேம் பிரிண்ட்(மிக மட்டமான தரமுடையது) வெளிவரவே ஒரு வாரம் ஆகும். அதன் பளிங்கு பிரிண்ட் கிடைக்க 3 வாரங்களோ அல்லது ஒரு மாதத்திற்கு மேலையோ ஆகும். ஆனால் இவர் டிடிஹெசி ஒளிபரப்பிய 2 மணி நேரத்தில் ஹெச்டியில் பளிங்கு போல பிரிண்ட் எடுத்து மார்கெட் கொண்டு வந்துவிட முடியும். அது கமலுக்கு நான்றாக தெரிந்திருக்கு. டொரண்ட என்பது திருட்டுத்தனமா படத்தை டவுன்லோட் செய்யும் தளம்
Anonymous said…
நேற்று தான் இந்த விஸ்வரூபம் படம் பார்த்தேன். ஒரு நடு நிலையானவான் என்ற அடிபடையில் என் கருத்து என்னே வென்றால் அப்கானிஸ்தான் பற்றியோ , தாலிபான்கள் பற்றியோ தெரியாத பாமர மக்கள் இந்த படத்தை பார்த்தால் இங்குள்ள இஸ்லாமியரை நிச்சயம் ஒரு காட்டு மிரண்டியாகவோ ,இரக்க மற்ற கொடுரகாரர்களாக தான் நினைக்க தோன்றும்.

பள்ளி மாணவர்கள் , சிறு குழந்தைகள் பார்த்தல் இஸ்லாமியரை பற்றி தவறான எண்ணமே மனதில் பதியும், நிச்சயம் தன இஸ்லாமிய நண்பனை தீவிரவாதி என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள்.எல்லா நண்பர் கூட்டத்திலும் ஒரு இஸ்லாமிய நண்பன் இருப்பான் அவனுக்கு தீவிரவாதி என்ற பட்டபெயர் உறுதியாகி விட்டது.

அமெரிக்க வீர்கள் அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை கொள்ள மாட்டார்கள் என்று முல்லா உமரே கூறுவது போல் ஒரு காட்சிஎனக்கு அக வாயால் சிரிப்பதா புற வாயால் சிரிப்பதா என்று குழப்பம் தோன்ற இரு வாயாலும் சிரித்து வைத்தேன்.

கமல் ஹாசன் வெள்ளைக்காரன் முன் மண்டி இட்டு ( இன்னும் பச்சையாக சொல்ல என் மனம் ஏங்குகிறது நாகரீகம் கருதி என்னால் அதை எழுத முடியவில்லை)அமெரிக்கர்கள் காலை கழுவி குடித்து விட்டார் .தீவிரவாதிகளை கண்காணிக்கும் காமிரா முன் வரும் கரப்பான் பூச்சியை ஊதி சாதனை செய்து விட்டு, அமெரிக்க அதிகாரி ஒரு புன்னகை மூலம் அப்ளாஸ் செய்வாரே . இந்த காட்சிக்கு பதிலாக ,கமல் நேரடியா அந்த அமெரிக்கனின் ஷூவை நக்கி இருக்கலாம்.

ஆஸ்கார் விருது மட்டும் உலகின் அங்கீகாரம் கிடையாது என்று சொன்னவர் அந்த அமெரிக்க அங்கீகாரத்திற்கு இந்தியனின் மானத்தை ஏலம் போட்டு விட்டார்.

மற்றபடி கதை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை . ஹேராம் படத்தில் அந்த சோடா பேக்டரி சீன எவளோ போர் அடிக்குமோ அதே போல தாலீபான்களை காட்டும் கட்சிகள் ஹிந்தி , அராப் ,இங்க்லீஸ் என்று எல்லா மொழிகளிலும் பேசி கடைசியில் நமக்கு தலை சுத்துவது தான் மிச்சம்.

இந்த படத்திற்கு நூறு கோடி என்று சொல்வது மிக பெரும் பொய் . சத்தியமா சொல்றேன் கமல் சம்பளம் இல்லாமல் முப்பது கோடி கூட ஆகிருகாது. கமல் இப்படிலேம்மா பொய் சொல்லி பொழப்பு நடதுனுமா ?

ஆப்கன் வீதி போல நாலு வீடு எல்லாம் செட்டிங் அந்த வீட்டை அமெரிக்கர்கள் பாம் போட்டு அழிப்பார்கள் . அதான் செலவு.அமெரிக்கால கார் சேசிங் மற்றபடி வேற செலவு ஏதும் தெரியல .மறுபடியும் கேக்குறேன் கமல் இப்படிலேம்மா பொய் சொல்லி பொழப்பு நடதுனுமா ?

கமல் தெரியாமலோ ,முற்போக்கு சிந்தனயோடோ இந்த படத்தை எடுக்க வில்லை மிக மிக திட்டமிட்டு தாலிபான்கள் என்ற பெயரில் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை கேவல படுத்தி காட்டு மிராண்டிகளாக சித்தரித்து அமெரிக்க அங்கீகாரத்தை பெறவே இதனை மிகவும் கவனமுடன் செய்திருக்கிறார் .

இப்படத்தின் மூலம் கமலின் முற்போக்குவாதி என்ற சாயம் வெளுத்து உண்மை முகம் வெளி பட்டு விட்டது.

ஒரு வரியில் சொல்லவேண்டுமானால் விஸ்வரூபம் கமலின் சுயரூபம் .

எது எப்படியோ இந்த பிரச்சனையால் இந்த விளங்காத படம் எப்படியும் கமலுக்கு போனியாகிவிடும் .