நேற்றிலிருந்து ஒரே எதிர்பார்ப்பு இந்த இரண்டு திரைப்படங்கள் பற்றியதுதான்!
நீதானே என் பொன்வசந்தம் கவுதம் மேனன் இயக்கத்திலும், கும்கி பிரபு சாலமன்
இயக்கத்திலும் வெளிவர இருக்கிறது என்பதே, எல்லோரதும் கவனத்தை ஈர்த்த ஒன்றாக இருந்தது!
கவுதம் மேனன் காதல் திரைப்படங்கள் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்
படங்களுக்கு தனி எதிர்பார்ப்பு, தனியான கதைகளம், சுவாரசியமான காட்சிகள் என்று எல்லோரையும்,
கட்டி போட்டு படத்தை வெற்றிபடமாக்கி விடுவார். ஆனால், இம்முறை வித்தியாசமாக,
இளையராஜாவுடன் இணைந்து இருப்பதால், எதிர்பார்ப்பு என்னமும் அதிகரித்து இருக்கிறது.
இளையராஜா இசையில், பாடல்கள் பலருக்கு பிடித்தும், பிடிக்காமலும் ரெண்டும் கெட்டான்
நிலையில் இருக்கையில், பிண்ணனி இசையில் என்ன செய்திருப்பார்? என்று, திரைப்படம்
பார்க்கபோவோர் பாதிபேராக இருக்கப் போகிறார்கள். வழமையாக, கவுதம் மேனன் திரையில்
பாடல்கள், பாடல்களுக்கான காட்சிகள், பிண்ணனி இசை பற்றி சொல்லி தெரியவேண்டிய
அவசியமில்லை. பார்க்கலாம், இளைய ராஜா – கவுதம் மேனன் கூட்டணி பற்றி!
பிரபு சாலமன் நல்ல பல படங்களை இயக்கியும், மைனா திரைப்படம் மூலம்தான் பலருக்கு
தன்னை வெளிச்சம் போட்டு காட்டியவர். பிரபு சாலமனின் கண்டுகொள்ளாமல் போன
திரைப்படங்களில் லாடம் என்ற திரைப்படமும் ஒன்று. பார்த்தவர்களுக்கு
தெரிந்திருக்கும். பார்க்காதவர்கள் தேடி பாருங்கள். மைனா திரைக்கதை ஏற்படுத்திய
வெற்றி, எதிர்பார்ப்பு, சிவாஜியின் பேரனின் நடிப்பு என்று ஏகபட்ட
எதிர்பார்ப்புக்களுடன் கும்கி திரைக்கு வருகிறது. பிரபு சாலமன் தொடர்ந்தும் நல்ல
திரைப்படங்களை கொடுக்க கூடியவர் என்ற பெயரை இந்த திரைக்கதையில், நிலைநாட்ட வேண்டிய
கட்டாயத்தில் இந்த திரைக்கதையை எடுத்து இயக்கி இருக்கிறார். முயற்சி
வெற்றியளிக்குமா? என்று திரையில் பார்க்கலாம்.
தனுஷ் Vs ரஜனி
இன்றைய நாளில் Youtube பக்கமாக போனால், அதிகமாக பேசபடுவது மாமா – மருமகன் வீடியோக்கள்
தான். சூப்பர் ஸ்டார் மிக மிக நீண்ட நாட்களுக்கு பின்பு, ரசிகர்களை சந்தித்து
பேசியிருக்கிறார் என்பது நேற்றைய தினத்தின் பரபரப்பு செய்தி! அதன் காணொளி, இன்று
காலை முதல் பரபரப்பாக இருக்கிறது. அரசியில், பற்றியும் வெளிப்படையாக மனம் திறந்து
இருக்கிறார், அரசியல் பக்கம் லைட்டாக போய், மூக்குடைபட்டு வந்த நம்ம தலைவர். அரசியில்,
தவிர்த்து வழமையான பஞ்ச், தலைவருக்கே உரிய ஸ்டைலை உள்ளடக்கிய பேச்சு இருக்கிறது.
காணொளி இங்கே :-
கொலைவெறி புகழ் தனுஷ் என்று கடந்த வருடம் முழுவதும் கவிஞராக மிரட்டிய தனுஷ்
மற்றும் இளம் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீண்டும் ஒருமுறை இணைந்து முயற்சி
செய்து இருக்கிறார்கள். தனுஷ் தயாரிக்கும் எதிர்நீச்சல் திரைப்படத்த்தில், சிவகார்த்திகேயன்
நடிக்க படத்துக்கு இசையை அனிருத் வழங்க, சில பாடல்களை தனுஷ் எழுதி இருக்கிறார்.
கொலைவெறி போல் பாடல் ஒன்றை வெளியிட்டு அதை ஹிட் ஆக்கும், முயற்சியில், ஒரு பாட்டை
வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால், அது என்ந்தளவு தூரம் என்னுமொரு ஹிட் தனுஷ் –
அனிருத் கூட்டணிக்கு வழங்கும் என்று தெரியவில்லை. பாடல் அப்படி இருக்கிறது.
கேட்டுத்தான் பாருங்களேன்!
விமர்சனம் இருக்குமோ? என்று நம்பி வந்தவர்களுக்கு நான் பொறுப்பல்ல, இனித்தான்
நீ தானே என் பொன்வசந்தம் பார்க்க வேண்டும். கும்கி இலங்கையில் இதுவரைகஜம் திரைக்கு
வரவில்லையாம். மாலையோ, இரவோ வந்தால் பார்ப்போம். பார்த்துவிட்டு மறுபடியும்,
எழுதுவம் J


Comments