இலங்கையின் முதலாவது VIP காட்சியில் மாற்றான்
படத்தை பார்க்க அதிர்ஷ்டவசமாக சந்தர்ப்பம் கிடைத்தது! முதலில், சந்தர்ப்பம் தந்த
அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்! என்ன? இப்படி நாங்கள் எல்லாம் படம் பார்க்க
வரும் போது, அதை சரியாக கே.வி. ஆனந்த், சூரியா ஆகியோர் சரியாக பயன்படுத்தி
கொன்றார்களா? என்பதுதான் விஷயமே!
படத்தில் புதுமை என்றால், இரண்டு சூர்யாக்கள்
ஒன்றாக ஒட்டி நடித்திருப்பதுதான்! அதுவும், ஒரே காட்சியை இரண்டு தடவை படமாக்க
வேண்டும், ஒரே மாதிரியான வெளிச்ச அமைப்புக்களுடன்! இயக்குனர் மட்டுமல்ல முழு
டீம்மும் அதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்பது நல்லாவே, தெரிகிறது!
அப்படியிருந்தும், பலகாட்சிகளில் ஒரு சூர்யா அந்நியமாக தெரிவதை தவிர்க்க
முடியவில்லை. பல சமயங்களில் இரண்டு சூர்யாவும் புறமுது காட்டி செல்லும் போது,
சூர்யா வேறு யாரையோ, கூட்டி கொண்டு போவது அப்பட்டமாக தெரிகிறது! எனவே தான், இந்த
புதுமையை வைத்து படத்தை முழுமையாக ஓட்ட முடியாது என்று நன்கு புரிந்து கொண்ட இயக்குனர்!
ஒரு சூர்யாவை இடைவேளைக்கு முன்பு கொன்று விட்டு, வழமையான தனது பாணியில் படத்தை
நகர்த்தியிருக்கிறார்!
கே.வி. ஆனந்த் படம் என்பதற்கான, அனைத்து
அடையாளங்களும் இந்த படத்தில் இருக்கிறது! அதாவது ஒரே வகையான டெம்லேட்டில்
வித்தியாசமான கதையை பொருத்தி இருக்கிறார்! இதற்க்கு சிறந்த உதாரணம், ஒரு உயரமான
பாறையில் ஹீரோ-ஹீரோயின் நடனமாடும் காட்சி இந்தப்படத்திலும் இருக்கிறது! தான்
இயக்கி மக்கள் மறந்து போன, கனா கண்டேன் படத்தையும் கொஞ்சம் நினைவுபடுத்தி, அப்படியே
அயன் சூர்யாவை தழுவி, கோ பக்கமும் போய் இறுதியில் தான் எடுக்கும் படம் மாற்றான்
என்பதை உணர்ந்து கொண்டு, அதில் வித்தியாசம் காட்ட முயற்சி செய்து இருக்கிறார்!
கே.வி.ஆனந்த் நல்ல கதைகளத்தில் நிறைய விடயங்களை
கோட்டை விட்டு இருக்கிறார் என்றே, எனக்கு எண்ணத் தோன்றுகிறது! சூர்யா என்ற நல்ல நடிகனின்
நடிப்பை கொஞ்சம் வீணாக்கியது போல ஓர் உணர்வு, படம் முழுதும் இருக்க வேண்டிய
திரில்லர் காணாமல் போன உணர்வு என்று பல இடங்களில் பலதும் மிஸ்ஸிங்!
சூர்யா பக்கம் குறைகள் என்று இல்லை! அதிகம்
பரிச்சயமான இரண்டு வேடங்கள் பக்கத்துக்கு பக்கத்தில் இருக்கிறது! அதில்,
வேறுபாட்டை காட்டி நன்றாகவே நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் எந்த குறைபாடும்
இல்லை! சில பல இடங்களில் பார்த்த சூர்யாவை பார்த்தது போல இருப்பது, சூர்யாவின்
தவறா? இயக்குனர் தவறா? என்று தெரியவில்லை! அதுபோல, கஜால் அகர்வால் இந்த படத்துக்கு
அருமையான தெரிவு என்றே சொல்ல வேண்டும்! பல இடங்களில் அவரை பார்த்து கொண்டிருப்பதால்,
நேரம் போவது தெரியவில்லை! வழமையான இயக்குனர்கள் போல, ஹீரோயினை ஜீரோ ஆக்காமல்,
நடிக்க வாய்ப்பளித்திருப்பது, ரசிகர்களாகிய எங்கள் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல
வேண்டும்! :P பாடல்களில் கஜால் அசத்தல்.
ஹரிஸ் ஜெயராஜ் பற்றி சொல்லவா? வேணாமா? என்று
பதிவு எழுதும் போதே, யோசித்து கொண்டிருந்தேன்! சொல்லித்தானே ஆக வேண்டும்! பின்னணி
இசையில் கூட, ரகுமான் போல பாடல்களின் BGMகளை பயன்படுத்தி இருந்தாலும், அவை ரகுமான்
பயன்படுத்துவது போல இல்லை! பல இடங்களில் காட்சிகளில் விட்டுவிட்டு, இது எந்த
பாடலாக இருக்கும்? என்று நாங்களே போட்டி போட்டு கண்டுபிடிப்போம் பாருங்களேன்! J
ஒளிபதிவாளர், கமெராமேன் என்று பலரும் இந்த
படத்தில் தங்கள் பக்க உழைப்பை நிறையவே கொட்டி உழைத்து இருக்கிறார்கள்! எல்லோர்
உளைப்புக்களும் நிறைவாகவே இருக்க, சுவாரசியமான கதைகளன் + நச் வசனங்கள் மிஸ்ஸிங்
ஆவதுதான் குறையாக இருக்கிறது! சூர்யாவுக்கோ, தயாரிப்பாளர்க்கோ இந்த படம் எந்த
வகையிலும் நஷ்டம் தரப்போவதில்லை! ரசிகர்களுக்கு மட்டும் குறையாக இருக்க போவது
நிச்சயம்!
இறுதியாக, நான் எதிர்பார்ப்பது ஒன்றுதான்!
வழமையாக தன் நல்ல படங்களை தானே, நக்கல் செய்துகொள்ளும் இயக்குனர், அடுத்த படத்தில்
இந்த படத்தை பற்றி எப்படி நக்கல் காட்சி வைப்பார் என்றுதான்........ :P
மாற்றான் – ஒருவேளை கதையும் மாற்”றான்” போல


.jpg)

Comments
same feel ;)