தாண்டவம் + இலங்கையின் புதுமை முயற்சி


விக்ரமின் நடிப்பு ஒன்றை மட்டும் நம்பி, அவர் எப்படி வேண்டுமானாலும் நடிப்பார்? மக்கள் பார்ப்பார்கள் என்ற ரீதியில் இயக்குனர் விஜய் தந்திருக்கும் ஒரு திரைப்படமே தாண்டவம்.
பார்வையற்றவர் எப்படி அநீதிகளை இழைத்தவர்களுக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டுவார் என்ற ஒருவரி கதையை டேவலப் செய்து, அதை இந்தியா முதல் லண்டன் வரை நகர்த்தி ஒரு அதில் கொஞ்சம் திருமணத்துக்கு பின்னான காதல், சாதல், & மோதல் + சந்தானத்தின் நகைச்சுவை என்று கொஞ்சம் தட்டுத்தடுமாறி தர முயன்று அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார் இயக்குனர்.

படத்தின் மிகப்பெரியபலம் விக்கிராமின் நடிப்பு மற்றும் விக்ரம் – அனுஷ்கா தோன்றும் காட்சிகள்! கண்தெரியாதவர்கள் எப்படி எதிரொலிகளை பயன்படுத்தி நடிப்பார்கள் என்பதை அதையே தன்வாழ்க்கையையாக கொண்டு வாழும் ஒருவரை கொண்டு பழகி விக்ரம் செமையாக நடித்து இருக்கிறார்! அவர் வாயால் ஒலி எழுப்பி நடிக்குமிடங்கள் எல்லாமே அசத்தல்! விக்ரம் நடிப்பு தொடர்பில் சொல்லி தெரிய வேண்டியது இல்லைதானே? அனுஸ்காவுடனும் காதல் காட்சியில் நல்ல உணர்வுகளை வெளிபடுத்தி நடித்து இருக்கிறார்! என்ன, சீயான் அந்த அழகு பதுமை முன்பு, கொஞ்சம் வயது போய் கொண்டிருப்பதை மறைக்க நிறைய கஷ்டபட்டும், அது தெரிவதை தவிர்க்க முடியாமல் இருக்கிறது!

படத்தில் அனுஷ்கா வருமிடங்கள் எல்லாமே அசத்தல்தான்! நடிக்கதெரிந்த ஒரு நடிகை! அதுவும், நடிக்க நல்ல வாய்ப்பு இருக்கும்போது தவற விடுவாரா? நடித்து எல்லோர் மனதையும் தொட்டு விட்டு செல்கிறார்! விக்ரம்-அனுஷ்கா தோன்றும் “ஒரு பாதி கதவு நீயடி..” பாடல் அருமையாக இருக்கிறது! சந்தானம் நகச்சுவைக்கு என்று படத்தில் நடிக்கிறார்! சில, இடங்களில் அவரின் வழமையான பாணி வசனங்கள் நச்! பல இடங்களில் சோதிக்கிறார்! எமி ஜாக்சன் அழகாக நடந்து, கொஞ்சம் பேசி அழகாக வந்து போகிறார்! லட்சுமிராய் வழமை போல, உதவி செய்து இறந்து போகிறார்! நாசர், சரண்யா, ஜெகபதி பாபு ஆகியோர் தங்கள் பங்கை சரியாக செய்தாலும், நாசரின் இலங்கை தமிழ் கொஞ்சம் அல்ல, நிறையவே இடிக்கிறது!

இசையில் ஜீ.வி பிரகாஸ் நிறைய கொடுக்க நினைத்து அதை செய்து இருக்கிறார்! சில, சமயங்களில் படத்தின் வேகத்துக்கு பாடல்கள் தடை போடுவதால் பாடல்களை முழுமையாக ரசிக்க முடியவில்லை! பின்னணி இசை கூட ஓகே! சில பாடல்கள் கேட்க்கும் போது, இந்த இசையை முதலில் கேட்டது போல உணர்வதை தவிர்க்க முடிவதில்லை!

இயக்குனர் விஜய்! தெய்வதிருமகள் என்ற படத்துக்கு பிறகு, அதிக எதிர்பார்ப்புகளுடன் கொடுத்த மசாலா படமே தாண்டவம்! பல இடங்களில் கதையின் வேகம் குறைந்து போவதால், கொஞ்சம் சலிப்பு! என்னும் விறுவிறுப்பாக மாற்றியிருக்கலாம்! இதற்க்கு முக்கிய காரணம், படத்தின் காட்சிகள் சில ஏற்கனவே, தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்து பழகிய திரைப்பட காட்சிகள் என்பதே! அடுத்த படத்தில் சிறந்த ஆங்கில தழுவல் ஒன்றை திறம்பட நடிகர் விஜய்க்கு வழங்குவார் என்று எதிர்பார்ப்போம்! :P திரையின் சிறப்பு, படத்தின் ஒளிப்பதிவு + கமெரா கோணங்கள்!

இயக்குனர் விஜய் என்னும் கொஞ்சம் கஷ்டபட்டு தாண்டவமாடியிருக்கலாம்! விக்ரமின் நடிப்பை சரியாக வாங்கிக்கொள்ள தெரிந்தவருக்கு, தனது திரைக்கதையை சரியாக வழங்க முடியாமல் போனது ஏனோ தெரியவில்லை! மசாலவுக்கும், மசாலா இல்லாத படத்துக்கும் நடுவில் நின்று இந்த படத்தை ஒரு குழப்பமாகவே தந்து இருக்கிறார்!

கேடயம் – மாதாந்த சஞ்சிகை

பதிவுகளில் நமக்கு நன்கு தெரிந்த வரோவின் உழைப்பில் மாதாந்த சஞ்சிகையாக வெளியாகி இருக்கிறது கேடயம் நூலின் முதலாவது பதிப்பு! முதலாவது சஞ்சிகை மூலம் அதிகளவிலான சர்வதேச விளையாட்டு போட்டிகளின் கட்டுரைகளை பிரசுரித்து இருப்பினும், எதிர்காலத்தில் உள்நாட்டு விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க இருக்கிறார்கள்!

கேடயம் நூலின் அனைத்து பக்கங்களுமே, வர்ணமயமாக அமைக்கபட்டு இருப்பதுடன், நூலின் முகப்பு சிறப்பாக இந்திய சஞ்சிகைகளின் தரத்துக்கு ஏற்ப, வடிவமைக்கபட்டு இருக்கிறது! அதைவிட, சிறப்பு பதிவுலகில் நாங்கள் ரசிக்கும் பல பதிவர்கள் இங்கே தங்கள் கட்டுரைகளை வரைந்து இருப்பதுதான்! ஏனைய சஞ்சிகைகளுக்கும், பதிவர்கள் கட்டுரைகளுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கும்! அதை, இந்த புத்தகத்தை வாசிப்பதன் மூலம் அறியலாம்! இப்போது 50/= என்ற அறிமுக விலையில் விற்பனையாகும் இந்த புத்தகத்தை யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கிறது!

நானும் இந்த புத்தகத்தில் ஒரு ஆக்கத்தை, “முதலிடத்தை இழந்த இங்கிலாந்து” என்ற தலைப்பில், இங்கிலாந்து – தென்ஆபிரிக்கா தொடரை பற்றி முழுமையாக அலசி எழுதியிருக்கிறேன்! இப்படியான சஞ்சிகை ஒன்றில் எழுத வாய்ப்பளித்த வரோ அண்ணாவுக்கு நன்றிகள்! வாங்கி படியுங்கள் கேடயத்தை, என்னுடைய ஆக்கம் தொடர்பிலான உங்கள் கருத்துக்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! 

Comments