உலகத்தில் நாங்கள் வாழும் வாழ்கையையும் தாண்டி இன்னுமொரு இருண்ட உலகம் இருக்கிறது. அங்கும், எங்களை போல சராசரி மனிதர்கள் என்னும் சில மனிதர்களால், எங்கள் இயல்பான உலகத்தில் வாழ முடியாதவாறு மாற்றி கொண்டிருப்பதையும், அப்படி மாற்றபட்ட ஒருவனின் ஒரு வாழ்க்கையின் நிகழ்வுகளையும் இந்த படத்தின் மூலம் கௌதம் வாஷ்தேவ் மேனன் பதிவு செய்து இருக்கிறார். இதுவரை யாரும் பார்த்திராத, இனியும் எடுக்க யாரும் முன்வராத (அப்படித்தான் நினைக்கிறேன்) கதை களத்தை மேனன் பதிவு செய்து மக்களுக்கு தந்து இருக்கிறார். ஆனால், எல்லோரையும் இது எப்படி சென்று அடையும் என்பதில்தான் இதன் வெற்றி, மற்றும் விழிப்புணர்வு என்பது தங்கி இருக்கும்.
படத்தின் கதையை எந்த இடத்திலும் சொல்லுவது பொருத்தமற்றது. அது, ஒரு சிலவேளை பார்க்க இருப்பவர்களுக்கு சுவாரசியத்தை தவிர்த்து விடும். அதற்காக இது நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்றும் நான் சொல்லப்போவது இல்லை. விரும்பியவர்கள் பாருங்கள். உங்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை உங்கள் பார்வையில் எப்படி இருந்தாலும் விமர்சியுங்கள்.
படத்தின் கதை தமிழ் சினிமாவுக்கு புதுசு. படமாக்கிய விதம் அதுவும் புதுசு. பாடல்கள் இல்லாமல் அண்மைக்காலத்தில் வந்த படங்களில் இதுவும் ஒன்று. பல இடங்களில் கௌதம் மேனனின் படம் என்பதற்கான அடையாளங்கள் வருவதை அவரால் தவிர்க்க முடியவில்லை. ஆனாலும், படத்தில் எந்த ஒரு இடத்திலும், இசை வரவில்லை என்று ரசிகன் ஒருவன் எங்குமே நினைக்காத அளவுக்கு படத்தை எடுத்து இருப்பவர்க்கு பாராட்ட வேண்டும். அதை விடவும், புதுமுகம் கதாநாயகன் என்று சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பான நடிப்பு. அவரை தேர்ந்து எடுத்தமைக்கும் ஒரு பாராட்டு. படத்தில் வரும் போலீஸ்காரர். சமீரா, மற்றும் இதர சின்ன சின்ன கதாபாத்திரங்கள் என்று அனைத்துமே சூப்பர்! சமீரா படத்ஹ்டில் வரும் அளவு காட்சிகள் குறைவு என்றாலும், அவரது நடிப்பு நிறைவானது. நட்புக்காக இறுதியில் சமந்தாவும் இருக்கிறார். படத்ஹ்டின் பெரும்பாக காட்சிகள் இரவு நேர காட்சிகளாக இருந்தாலும், படம் பதிவு செய்யபட்ட முறை அருமை. அதை விடவும், ஒவ்வொரு காட்சியிலும் கமெராவின் வெவ்வேறு கோணங்களிலான பார்வையில் கதையை சொல்லுவது நன்றகவே இருக்கிறது. படத்தின் இறுதியில் விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் கருத்துக்கள் அதை விடவும், தொடர்பு கொள்ள தொலைபேசி இலக்கங்கள் (இந்திய இலக்கங்கள்) என்று தருவதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
இப்படி எல்லாம் மனிதர்கள் இருப்பார்களா? என்ற சிந்தனை நிச்சயம் இந்த படத்தை பார்த்ததும் உங்களுக்கு நிச்சயம் வரும். ஆனால், இப்படியும் இருக்கிறார்கள் என்பதைத்தான் கௌதம் மேனன் சொல்லி இருக்கிறார். படத்தை பார்த்ததும் உங்களுக்குள் ஒரு அருவருப்பு தன்மை வருவது தவிர்க்க முடியாததே! அதற்க்கு படம்தான் காரணம் என்று நினைப்பது தவறு!!! அது எங்கள் சமூகத்தின் தவறு என்றே நான் சொல்லுவேன். எங்கள் சமுகத்தில் இப்படி எல்லாம் இருக்கமாட்டார்கள் என்று நாங்கள் வேண்டுமானால், மார்பு தட்டி கொள்ளலாம். ஆனால், சில உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் போது நாங்களே மூக்கின் மீது விரல் வைத்து ஆச்சரியமாக பார்ப்போம். இதற்க்கு மேல், இந்த படம் பற்றி எதையும் சொல்லுவது உகந்தது இல்லை.
உடல் பலவீனமானவர்கள், இதய நோய் மாற்று கர்ப்பிணி பெண்கள் உண்மையில் இதை பார்ப்பது உகந்தது அல்ல. பெண்களுக்கு எப்படி என்று சொல்ல தெரியவில்லை. என்னை பொருத்தவரை இந்த படத்தை விழிப்புணர்வு படமாகவே பார்க்கிறேன்.
நடுநிசி நாய்கள் – இந்த நாய்களை கொல்ல அனுமதிப்பதில் தப்பு இல்லை

Comments
Right :)
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)
..தற்க்கு படம்தான் காரணம் என்று நினைப்பது தவறு!!! அது எங்கள் சமூகத்தின் தவறு"
நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.