யுத்தம் செய் – தி/வி


படங்கள் வெளியானவுடன் பார்க்க கிடைக்கும் தருணங்கள் இப்போது அதிகம் குறைந்து விட்டன. ஆனால், இப்போதுதான் நீண்ட நாட்களின் பின்பு ஒரு படம் வெளியான நாளே பார்க்க கிடைத்தது என்றால் அது “யுத்தம் செய்” படம்தான். சுதந்திர தினம் இன்று பதிவுலக நண்பர்கள் வதீஸ் அண்ணே,நிருசா அண்ணே இருவருக்கும் விடுமுறையை பெற்று தந்த காரணத்தினால் இன்றே பார்த்து விட்டோம். அதிலும் சேரன், மிஸ்கின் மீது எங்களுக்கு ஓரளவு நம்பிக்கை இருந்ததும், முதல் நாளே பார்க்க காரணங்களில் ஒன்று.

யுத்தம் செய் அமைதியாக ஆரம்பித்து மெல்ல மெல்ல எங்களை கதையின் ஓட்டத்தில் ஒன்றிக்க வைத்து எங்களை இறுதியில் பதற, கதற வைப்பதில் மிஸ்கின் முழுமையான வெற்றியை கண்டு இருக்கிறார். கண்டிப்பாக குழந்தைகள், இதய நோய் இருப்பவர்கள் என்று பலரும் பார்ப்பதை தவிர்க்க வேண்டிய படம் இது. சில இடங்களில் தத்ரூபமாக படத்தை தர வேண்டும் என்பதில் மிஸ்கின் காட்டி இருக்கும் ஆர்வம், சிலவேளைகளில் பலரை முகம் சுளிக்க வைக்கலாம்.
படத்தின் கதைப்படி, சேரன் ஒரு சிபிஐ அதிகாரி. அவரது தங்கை காணமால் போனதுடன் கதை ஆரம்பிக்கிறது, பிறகு தொடராக ஆட்கடத்தல்கள், கடத்தபட்டவர்களின் கைகள் துண்டிக்கபட்டு பொது இடங்களில் போடபட்டு கிடக்க, அந்த வழக்கையும், தொலைந்து போன தன் தங்கையையும் துப்பு துலக்க படத்தின் கதை நகருகிறது. சேரன் வழக்கை ஆராய்ந்து ஆரய்ந்து கொண்டு போக, படத்தில் தொடராக பல சஸ்பென்ஸ் வந்து ஒரு புள்ளியில் சந்திக்கின்றது. அது ஒரு வைத்தியரும், அவரது குடும்பமும் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் வந்து நிற்கின்றது. அதிலிருந்து, மெல்ல மெல்ல சஸ்பென்ஸ்களை உடைத்து யார் கொலையாளி??? என்பதையும், தன் தங்கைக்கும் என்ன நடந்தது? அவரை மீட்டரா? என்று கதை முடிவடைகிறது. இதுதான் படத்தின் முக்கிய கதையாக இருந்தாலும், பல கிளைகதைகளும் படத்தில் இருக்குறது. பார்க்க உங்களுக்கே புரியும்.


மிஸ்கின் இம்முறை பெரிய புள்ளிகளின் பாலியல் ஆசைகளுக்காக கடத்தப்படும் பெண்களின் நிலை, அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதை ஒரு சமுகத்தின் நபர்களில் ஒருவராக இருந்து தனது கதையில் காட்டி இருக்கிறார். மிஸ்கின் அஞ்சாதே படத்துக்கு பிறகு மற்றுமொரு அதிரடியான க்ரைம் கதையை கையாண்டு வெற்றியும் கண்டு இருக்கிறார். கதைக்கு யார் தேவையோ அவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உரிய பாத்திரங்களை கொடுத்து, படத்தின் அழுத்தங்களை அதிகரிக்க செய்து, ரசிகர்களை இறுதிவரை விறுவிறுப்புக்கு பஞ்சம் என்று சொல்லாத வகையில் படத்தை தந்து இருக்கிறார். படத்தின் ஒவ்வரு காட்சியும் செதுக்கப்பட்டு இருக்கிறது. பாடல்கள் இல்லாமல் சராசரி ரசிகனையும் மிஸ்கின் ரசிக்க வைக்க படத்ஹ்டின் கதையை மேலும் தீவீரமாக்கி இருக்கிறார் என்று சொல்லலாம். ஆனாலும், படத்ஹ்டின் இடைவேளைக்கு பின்னால், ஓரளவு கதையை ஊகிக்க கூடியதாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் மிஷ்கினின் TRADEMARK வடிவிலான பாடல் ஒன்று படத்தில் வருகிறது. இதில் அமீர் சிறப்பு நடனம் ஆடி அசத்தி இருக்கிறார். படம் முழுவதும் மிஸ்கின் தெரிகிறார். கதைதான் நாயகனே தவிர, கதாநாயகன் என்று எவருமில்லை என்பதில் மிஸ்கின் தீவிரமாக இருந்ததை படத்தினை பார்க்கும் எவரும் புரிந்து கொள்ள முடியும்.

படத்தின் பல காட்சிகளிலும் மிக மிக நேர்த்தியாக நிஜமான இடங்கைளிருந்து தரபட்டிருக்கிறது. அதிலும் ஆரம்ப பிணவறை காட்சியை குறிப்பிட்டு சொல்ல முடியும். நிஜங்கள் எப்போதும் இப்படித்தான் என்பதை அழகாக படம் பிடித்து காட்டி இருக்கிறார். சேரன் ஒரு அதிகாரியாக இருந்தும், தன் தங்கை பற்றி அறிந்து கொள்ள ஆட்டோகாரர்களுக்கு டீ வாங்கி குடுத்து சேவகம் செய்வதும், இறுதி காட்சிகளில் கெஞ்சுவதும் என்று பல இடங்களில் பல உண்மைகளை மிஸ்கின் காட்டி இருக்கிறார். படத்துக்கு A சான்றே வழங்கபட்டு இருக்கிறது. அது ஏன்? என்பதை படம் பார்த்தே தெரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து, படத்தின் கேமராமேன் மற்றும் EDITOR, இசையமைப்பாளர் மூவருமே கட்டாயம் பாராட்டபட வேண்டிய படத்தில் நடிக்காத நாயகர்கள். (கேமராமேன் சத்யா, இசை கே, EDITING தெரியவில்லை) இவர்கள் மூவரதும் பங்களிப்பே மிஸ்கின் கதையில் மேலும் திகிலை அதிகரிக்க செய்து விறுவிறுப்பை அதிகரிக்க செய்து இருக்கிறது. இரவில் நடக்கும் கதையில் இருக்கும் தெளிவு, பொருத்தமான இடங்களில் பின்னணி இசை, இதை விட கமெரா செல்லும் கோணங்கள் கூட எங்களுக்கு கதையை சொல்லும் திரையில். கமெரா கையாள்கையின் திறமை ஒவ்வரு காட்சியிலும் தெரிகிறது. படத்தை பார்த்த எங்களுக்கு இசையமைப்பாளரை நினைக்க ஆச்சரியமாக இருந்தது. கே என்ற இவர் அற்புதமாக பின்னணி இசையை தந்து இருக்கிறார். அதற்க்கு நிருசா அண்ணா தந்த சில COMMENTS சான்று. எடிட்டிங் பாராட்டபட வேண்டிய மற்றுமொரு துறை. படத்துக்கான கலர் மற்றும் அனைத்தையும் அளவாக கலந்து தந்து இருக்கிறார்.

சேரன் படத்தில் மற்றவர்களை விடவும் பிரபல்யமான நடிகர் என்று மட்டும் சொல்லலாம். யுத்தம் செய் படத்ஹ்டில் இவர் கதா நாயகன் என்று தனித்து சொல்ல முடியாது. கதையோட்டத்தில் இவர் தனக்கு வழங்கபட்ட பாத்திரத்தை கச்சிதமாக செய்து காட்டி இருக்கிறார். வழமையாக சிறிது கொண்டு காதல் செய்யும் சேரனுக்கு நேர்மாறான கனதியான கதாபாத்திரம் இதில், வழமையான படங்களை போல உடல்வாகு கொண்ட, பஞ்ச் பேசும் சிபிஜ அதிகாரி போல இல்லாமல், புத்தியை மட்டும் கைகொண்டு வெற்றிகரமாக செயல்பட கூடிய ஆக்கிரோசமில்லாத அதிகாரியாக நடித்து இருக்கிறார். இவருக்கு துணையாக வரும் தீபா ஷா, யுகேந்திரன் இவர்கள் நடிப்பும் சிறப்பு. சேரனின் மேலதிகாரி, அரச வைத்தியர், வைஜி மகேந்திரன், லஷ்மி ராமகிருஷ்ணன் என்று படத்ஹ்டில் நடித்த அனைவரதும் நடிப்பு சுப்பரோ சுப்பர். அதிலும், குறிப்பாக லஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களின் நடிப்பு அபாரம். அப்படி ஒரு நடிப்பை அவரது எந்த முன்னைய படங்களிலும் பார்த்தது இல்லை. இல்லை அவருக்கு அப்படி வேடங்கள் கிடைக்க வில்லை என்று கூட சொல்ல முடியும். படம் முடிந்து வெளியே வரும் பொது, மனதில் கனதியாக இருக்கும் ஒருவரது கதாபாத்திரம் அவருடையதும்தான். அதிலும் துணிச்சலாக அவர் நடிக்கும் இடைவேளைக்கு பின்னான கதாபாத்திரம் பற்றி இங்கே சொல்லி உங்கள் ஆர்வத்தை குறைக்க விரும்பவில்லை. திரையிலேயே பாருங்கள்.

படம் மாபெரும் வெற்றியா? இல்லையா? என்பதை ரசிகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். காரணம், வழமையான படமொன்றில் இருக்க கூடிய எல்லாவிதமான மசாலாவும் இங்கு மிஸ்ஸிங். எனவே, ரசிகர்கள் எப்படி இந்த படத்தை ஏற்க போகிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. ஆனாலும், முதல் நாள் இன்றே சினிசிட்டி திரையரங்கில் பாதி நிறைந்து இருந்தது. இது யாருடைய ரசிகர்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், இப்படியான படங்களுக்கு முதல் நாளே இவ்வளவு ரசிகர்கள் என்பது ஓரளவுக்கு வெற்றிதான்.
படத்தில் குறைகள் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், அவைகள் எல்லாம் குறைகள் என்று சொல்லுமளவுக்கு பெரியன இல்லை. நகைச்சுவை என்ற ஒன்றே இல்லாமல், சராசரி ரசிகனையும் ரசிக்க வைக்கும் மிஸ்கின் முயற்சிக்கு இந்த படத்தின் வெற்றிதான் ஒரே பிரதிபலனாக இருக்க முடியும். என்னை பொருத்தவரையில் நல்ல கதையம்சம் கொண்ட இந்த ஆண்டின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என்பதை அடித்து சொல்லுவேன்.

யுத்தம் செய் – பல இடங்களில் தப்பில்லை என்றே சிந்திக்க வைக்கிறது

Comments

rushanth bose said…
எழுத்தில் இன்னும் அக்கறை காட்டுவது நல்லது.. வசன நடை கொஞ்சம் சுமார்...........மிக நீண்ட விமர்சனம்.....:(
மிஷ்கினைப் போலவே, கண்ணாடி போட்டுக்கொண்டு ஒரு வயதான சமயல்காரர் இருந்தாரே அவரைப்பற்றி குறிப்பிடாமலே விட்டுட்டியே...!
pakirvukku nanri. arumaiyaaka pathinthulleerkal. vaalththukkaL
N. Jaganathan said…
நல்ல விமர்சனம் நண்பரே, நான் இன்னும் படம் பார்க்க வில்லை. படித்த எல்ல விமர்சனக்களில் நீஙகள் சுட்டியுள்ள நிறை குறைகளைச் சொல்லியிருக்கிறார்கள். எஙகள் படம் தூங்காநகரம் பாருங்கள். அது பற்றி எழுதுங்கள்.
anuthinan said…
//rush89 said...
எழுத்தில் இன்னும் அக்கறை காட்டுவது நல்லது.. வசன நடை கொஞ்சம் சுமார்...........மிக நீண்ட விமர்சனம்.....://

குறைகளை சுட்டி காட்டியமைக்கு நன்றிகள்... என்னை திருத்தி கொள்ளுகிறேன். தொடர்ந்து உங்கள் கருத்துகளை வழங்கவும்
anuthinan said…
//நிரூசா said...
மிஷ்கினைப் போலவே, கண்ணாடி போட்டுக்கொண்டு ஒரு வயதான சமயல்காரர் இருந்தாரே அவரைப்பற்றி குறிப்பிடாமலே விட்டுட்டியே...!//

உண்மைதான் அண்ணா!!! சொல்ல போனால் படத்தின் கதை வெளியே வந்துடும் என்ற பயம்தான்
anuthinan said…
//மதுரை சரவணன் said...
pakirvukku nanri. arumaiyaaka pathinthulleerkal. vaalththukkaL//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.... தொடர்ந்து ஆதரவை வழங்கவும்
anuthinan said…
// N. Jaganathan said...
நல்ல விமர்சனம் நண்பரே, நான் இன்னும் படம் பார்க்க வில்லை. படித்த எல்ல விமர்சனக்களில் நீஙகள் சுட்டியுள்ள நிறை குறைகளைச் சொல்லியிருக்கிறார்கள். எஙகள் படம் தூங்காநகரம் பாருங்கள். அது பற்றி எழுதுங்கள்//

அண்ணா என்னும் தூங்காநகரம் இங்கு வெளியாகவில்லை. வந்ததும் பார்த்து விடலாம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
அருமையான விமர்சனம் அனுதினன்,
நான் பார்க்க ஆவலாய் இருக்கும் படம் மிஷ்கினுக்காக ஆனால் இப்போதைக்கு வாய்ப்பிருப்பதாக படவில்லை
Jana said…
"யுத்தம் செய் – பல இடங்களில் தப்பில்லை என்றே சிந்திக்க வைக்கிறது"

பூரணமாக உடன்படுகின்றேன்.