எந்திரன் திரைப்படத்தின் வெளியீடு இந்த மாத இறுதி என்பது கிடத்தட்ட உறுதியாகிவிட்டது. அப்படியே எங்கள் பதிவுலக பக்கங்களிலும் இப்போதே ஆதரவாகவும்,எதிராகவும் விமர்சன அலைகள் மெல்ல மெல்ல சூடு பிடிக்க தொடங்கியிருக்கின்றன. இதில் பெரும்பாலானோரின் இப்போதைய செய்தி சன் குழுமத்தின் விளம்பர கொள்கைபற்றியது ஆகும். இது தொடர்பான எதிர் விமர்சனங்கள் தொடர்பில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை.
சன் குழுமம் இப்போது படங்களை தயாரித்து வெளியிடுவதையும் தனது ஒரு தொழிலாக கொன்டிருக்கிறது.(தயாரித்த படங்களை வாங்கி வெளியிடுவது வேறு கதை) தயாரிப்பு தொழில் செய்யும் சன்குழுமம் மட்டுமல்ல எந்த நிறுவனமும் அதில் எப்படியாவது லாபம் பார்த்து விடவேண்டும் என்றுதான் இயங்கி கொண்டிருக்கும். அப்படி இயங்கும் சன் குழுமத்துக்கு அவர்களிடம் இருக்கும் உலக ஆதரவை பெற்ற (அவர்கள் மட்டுமல்ல சில ரேட்டிங் கூட அப்படித்தான் சொல்லுது) சன் தொலைகாட்சி இருப்பது பெரும் வரப்பிரசாதம். மக்களை மிக நெருக்கமாக சந்திக்கும் இவ்வாறான ஊடகம் ஒன்றை அவர்கள் விளம்பர உத்திக்காக பயன்படுத்துவது தவறா?
பலர் விமர்சிக்கும் போது சொல்லும் ஒரே காரணம்! சன் குழுமம் டப்பா படங்களை கூட சூப்பர் டூப்பர் படங்கள் என்று விளம்பரம் செய்கிறது. அத்துடன் நிமிடத்துக்கு ஒரு முறை விளம்பரம் செய்து கொல்லுகிறது என்று! அப்படி சொல்லுபவர்களுக்கு ஒரு கேள்வி, "நீங்கள் ஒரு படம் தயாரிப்பவராகவிருந்து, உங்களிடம் இப்படி புகழ் பெற்ற தொலைகாட்சி நிறுவனமும் இருக்கும் போது இப்படி அதிகபடியான விளம்பரம் செய்யாமல் இருப்பீங்களா???". சன் குழுமம் மட்டுமில்ல யாராக இருந்தாலும் இப்படி விளம்பரம் செய்வார்கள். காரணம்,
எந்த பெரிய சூப்பர் ஸ்டாரே நடித்திருந்தாலும் சரி, எந்த பெரிய இயக்குனர் இயக்கியிருந்தாலும் சரி, படத்துக்கு செலவழிக்கும் பணம் அவர்களுடையது. எப்படியும் பணத்தை மீட்பது மட்டுமில்லாது லாபத்தையும் பெற நினைப்பார்கள். அப்போது, இப்படியான எங்களால் ஏன் என்னால் கூட சகிக்க முடியாத விளம்பரங்கள் காட்சிபடுத்தபடும். அதை தவறு என்று சொல்ல முடியாது. எனவே, தவறு தவறு என்று சொல்லுவதை விட்டு விட்டு சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் அழுக்காச்சி நாடகங்களை பார்ப்பது இடையிடையில் வரும் இந்த சிறு விளம்பரங்களை பார்த்தாவது ரிலாக்ஸ் ஆகலாமே!!!


Comments
நியாயமானா கேள்விகளே இங்கு தெரிகின்றன. நானாக இருந்தாலும் அப்படித்தான் செய்வன். தொலைக்காட்சியில் வானொலியில் ஒரு நிகழ்ச்சியை பற்றி எவ்வளவு முன்னோட்டம் கொடுக்கப்படுகிறது அதேபோலதான் இதுவும்.//
உங்களுக்கு புரிகிறது அண்ணா!!!
நன்றி அண்ணா வருகைக்கும், கருத்துக்கும்!!!
அதுசரி..:)))//
:))
நன்றி நண்பா வருகைக்கும், கருத்துக்கும்!!!
ஜாவா கணேஷ் said...
இந்தவிடயத்தில் நான் உடன்பாடு கொள்ளமாட்டேன். ஏனெ;றால் தரமான படங்களை தயாரித்தால் (உதாரணம் சங்கரின் தயாரிப்புக்கள் -இயக்கங்கள் அல்ல) படங்களுக்கு அதீதமான விளம்பரங்கள் வருவதில்லை. ஆனால் ஜெயிக்கின்றன. இந்த விடயத்தில் சண் டி.வி. கொஞ்சம் ஓவர் என்பதை மறுக்கமுடியாது. ரேட்டிங்கிலும் சிறந்த படங்கள் வந்திருந்தாலும் தங்கள் படத்தை முதலாவதாக வைத்திருப்பது மகா மண்டமான செயலே. ராஜ் டி.வி.கூட தயாரிக்கின்றது. ஆனால் அது தனது படங்களை முதலிடத்தில் வைத்து ரேட்டிங் கொடுப்பதில்லை//
அப்படி சொல்ல முடியாது!!! சன்னில் மிகைபடுத்தபட்ட விளம்பரங்கள் இருப்பது உண்மை ஆனால், எந்திரனுக்கு செய்யப்போவது அப்படியானது அல்ல!!! சங்கர் இதற்க்கு முன் இயக்கிய படங்கள் ஒன்றும் 190கோடியில் தயாரிக்கப்படவில்லை. எனவே, இந்த விளம்பரங்களை முழுமையாக தவறு என்று சொல்ல முடியாது
நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்!!!
http://mathisutha.blogspot.com/2010/08/blog-post_17.html