மிக குறுகிய காலத்தில் பார்க்க கிடைத்த மற்றுமொரு விறுவிறுப்பான திரைப்படம் நான் மகான் அல்ல! தலைப்புக்கு அச்சு அசல் பொருந்ததக்க வகையில் மிக சிறப்பாக கார்த்தியின் கதாபாத்திரம் செதுக்கபட்டுள்ளது. இன்றைய இளம்தலைமுறையின் தவறான நடவடிக்கைகள் எப்படி ஒரு சராசரி மனிதனின் வாழ்கையை, சராசரி குடும்பத்தின் விதியை புரட்டி போடுகிறது என்ற ஒற்றை வரி கதையை அடிப்படையாக கொண்டு கதை நகர்ந்து செல்கிறது. இது மட்டுமே படத்தின் சாதக தன்மைகள்! மற்றும்படி சொல்லி கொள்ளும்படி நான் மகான அல்ல எதையும் தரவில்லை!
படத்தின் கதைப்படி, கார்த்தி வெட்டியாக ஊர் சுற்றி கொண்டு இருப்பார். திடீரென, அவரது நண்பியின் வீட்டில் கஜால் அகர்வாலை சந்திக்க நேர்கிறது. பின்பு, இருவருக்குமிடையில் காதல் தீ பற்றி கொள்ளுகிறது. இதற்கு இடையில் கார்த்தியின் தந்தை வாடகை வண்டி ஓட்டுனராக இருக்கிறார். எப்படியோ கதையோடு சம்பந்தபடும் கொலை நிகழ்வுக்கு சாட்சியகாரராக மாறுகிறார். பிறகு என்ன? அவரது தந்தையை கொலைக்கு காரணமானவர்கள் கொன்று விட, அவர்களை எப்படி கார்த்தி பழி தீர்க்கிறார் என்பதே மீதி கதை.
படத்தின் சாதக தன்மைகள்
இடைவேளைக்கு முதல் கார்த்தி பண்ணும காமேடி ரசிக்கத்தக்க ரகம். அதுவும் அவர் கஜால் அகர்வாலை கவருமிடங்கள் சுப்பரோ சூப்பர்! அதே போல, கார்த்தி மற்றும் அவரது தந்தைக்கும் இடையில் சொல்லபட்டிருக்கும் உறவுமுறை போராட்ட கதை நகர்வும் அருமை.
கார்த்தியின் நண்பர்களாக வருபவர்கள் தங்கள் பங்குக்கு நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார்கள்.கார்த்தி ஆவேசப்படும் போதும், அழுது புலம்பும் போதும், காதல் ரசனையை சொட்டும் போதும் நிறைவாகவே நடித்து பாத்திரத்துக்கு பொருந்தி இருக்கிறார்.
கஜால் அகர்வால் படத்துக்கு அழகு சேர்க்கவே பயன்படுத்தபட்டிருக்கிறார். இடைவேளைக்கு பின், முக்கியத்துவமில்லாத கதாநாயகி ஆனாலும், வரும் இடங்களில் தனது திறமையை வெளிப்படுத்துவது பாராட்ட கூடியது!
எல்லாவற்றயும் பார்க்க இயக்குனரை ஒரு விடயத்துக்காக பாராட்ட வேண்டும். கார்த்தி,கஜால் போன்றவர்களை மட்டுமே பெரிய ஸ்டார் நடிகர்களாக கொண்டு, வில்லன்கள் முதல் கொண்டு புதுமுகங்களை பயன்படுத்தி இருப்பது பாராட்ட வேண்டியது. படத்தின் வில்லன்களாக வருபவர்கள்தான் கிட்டதட்ட படத்தின் அச்சாணிகள்! படம் முடிந்த பிறகு கூட அவர்களை கொல்ல வேண்டும் என்று நினைக்க தக்க வகையில் தங்கள் பங்கு நடிப்பை தந்து இருக்கிறார்கள்.
யுவனின் பின்னணி இசை அருமையோ அருமை. அதுவும் கிளைமாக்ஸ் காட்சிகளில் இசை ரொம்பவே ரசிக்க கூடியது.
படத்தின் போக்கு இடைவேளைக்கு சற்று முன்னதாகவே சூடுபிடிக்க தொடங்கி அதே வேகத்தில் சென்று முடிவது சிறப்பு.
படத்தின் நீளம் குறைக்கபட்டமையும், விறுவிறுப்புக்கு காரணம் என்று சொல்லலாம்.
படத்தின் பாதக தன்மைகள்
கிட்டதட்ட படத்துக்கு கதை கூட வில்லன்தான். அக்மார்க் சிகப்பு மனிதன் படத்தின் கதை கரு பல இடங்களில் பிரதிபலிக்கிறது. இன்றைய காலகட்டத்தின் பிரச்சனைகளை சொன்ன காரணத்தினால் அந்த உண்மை ஓரளவுக்கு மறைக்கபட்டிருக்கிறது.
கார்த்தி இனி வரும் காலங்களில் தன்னை மாற்றி கொள்ளவே வேண்டும். பல இடங்களில் சூரியாதான் என்பது போல நடித்து இருக்கிறார். படத்தின் ஆரம்ப காட்சிகள் பையா படத்தை நினைவுபடுத்தும் ரகம். கார்த்தி இனி மாறாவிட்டால், ரசிகர்கள் மாறிவிட கூடும்.
யுவனின் பாடல்கள் கேட்கதக்க வகையில் அமையவில்லை. ஆனாலும், பின்னை இசை கேட்கலாம். பெரிய நடிகர்களின் படங்களிலும் யுவன் இசையை கொஞ்சம் கவனிக்கலாமே! (தில்லாலங்கடி,நான் மகான் அல்ல) இளைஜர்களுக்கு படத்தின் இசை எதிர்பார்த்த அளவு அமையவில்லை என்பது திரையரங்கில் தெரிந்தது.
படத்தின் பிற்பகுதி முழுமையான ஆக்ஷன் பகுதியாக இருந்தாலும், ஒரு பிடிப்புதன்மை நழுவ விடபட்டிருக்கிறது.
ஆனாலும், நான் மகான் அல்ல எனும் தலைப்புக்கு அமைவாக இன்றைய திருந்த வேண்டிய இளம் தலைமுறை பற்றி திரையில் காட்டிய இயக்குனருக்கு சபாஷ் தாராளமாகவே போடலாம். துணிந்து சரியான கதையை தெரிவு செய்த இயக்குனர் காட்சிகளை அமைக்கும் போது எந்த படங்களும் பாதிப்பு இல்லாமலும், இன்னமும் நிறையவே கவனிப்புகளையும் செய்து இருந்தால், படத்தின் வெற்றி விகிதம் கூடி இருக்கலாம்.
நான் மகான அல்ல – உண்மையாக மகானாக வாழவே முடியாது!


Comments
ஸ்டான்டர்ட் கொஞ்சம் இம்புரூவ் பண்ணிக்க மாமு.
சகாய ஹிருதயம்
:-)
ஜனா அண்ணா.. அப்ப மாஜாஜால்..?
ஜனா அண்ணா.. அப்ப மாஜாஜால்..?
"கடுப்பேத்துகிறார் யுவர்ஹொனர்.."
அனுதினன். தியேட்டர்களையே குத்தகைக்கு எடுத்திட்டீங்க போல..? சுடச்சுட முதல்பதிவுகளை தந்து அசத்திறீங்க.. இந்த முறை டி.வி.டி. இல்லை. இங்கையும் படம் வந்திட்டு நாளைக்கு கண்டிப்பாக பார்ப்பேன்//
பார்க்கிரதுல பிரச்னை இல்ல... அதிக எதிர்பார்ப்பு வேணாம்
ஏம்பா, இப்படி ஒரு மொக்கைப் படத்துக்கு இப்படி ஒரு விமற்சனமா ? இதுக்கு பேசாம அந்த கண்றாவியை இன்னும் இரண்டு தடவை பார்க்கலாம் போலருக்கு.
ஸ்டான்டர்ட் கொஞ்சம் இம்புரூவ் பண்ணிக்க மாமு.
சகாய ஹிருதயம்//
அண்ணே நீங்க சொன்னது எல்லாம் சரி பார்த்துக்கிறேன் அண்ணா!!!! மொக்கை எண்டு சொல்ல முடியாது அண்ணே!!! ஏதோ மிஸ்ஸிங் அவ்வளவுதான் எண்டு நினைக்கிறேன்
அருமை அனுதினன்...
:-)
ஜனா அண்ணா.. அப்ப மாஜாஜால்..?//
நன்றி அண்ணா!!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!!!
மாஜாஜால் இங்க இருந்தா அத விட்டு வைப்போமா என்ன???
:-)
ஜனா அண்ணா.. அப்ப மாஜாஜால்..?
"கடுப்பேத்துகிறார் யுவர்ஹொனர்.."//
:)))
எப்டித்தான் உடன பாக்கிறிங்களே தெரியல.... ஆனாலும் இப்பதிவை மொக்கை என்றால் மொக்கையை என்னென்று சொல்வது.... வாழ்த்துக்கள் நேரம் கிடைத்தால் நம்ம ஓடையிலும் நனைந்து உங்க வட்டத்திற்குள் என்னையும் சேருங்க.//
கொஞ்ச காலத்துக்கு நான் ரொம்ப வெட்டி சோ வேற வேலை இல்லையே!!!
நிச்சயம் உங்கள் ஓடையில் நனைய தயாராக இருக்கிறேன்.