நேற்று இத்திரைப்படத்தை பார்த்திருந்தாலும், இன்றுதான் விமர்சனம் எழுத முடிகிறது! ஓவர் வெட்டிதான் இதற்க்கு காரணம். வழமையான காதல் கதைதான் ஆனால், ஏனோ பிடித்து இருக்கிறது. பல இடங்கள் படத்தில் மட்டுமில்லை, நிஜத்திலும் கண்ட காரணத்தினாலோ, தெரியவில்லை.
மதராசபட்டனத்துக்கு பிறகு, திரையரங்கில் வெறும் 20பேருடன் பார்த்த நல்ல காதல் படம். ஆர்ப்பாட்டம் இல்லாத அறிமுக நாயகனின் அறிமுகம் படத்தில் இருக்கிறது. என்னை கேட்டால் படத்தின் கதாநாயகன் யுவன்சங்கர் ராஜா என்றுதான் சொல்லுவேன். குறைந்த பட்ஜெட் படத்துக்கு கூட இவ்வளவு கஷ்டபட்டு இருக்குது மனுஷன். தில்லாலங்கடியை விட இங்கு பாடல்கள் மட்டுமல்ல, பின்னணி இசை கூட ரொம்பவே ரொம்பவே சூப்பர்!
படத்தின் கதைப்படி,

நாயகன் அதர்வா காத்தாடி(பட்டம்) விடுவதே தன் வாழ்வில் பெரும்பகுதியாக வைத்து கொண்டு ஊர் சுற்றும் ஒரு கல்லூரி பையன். நாயகி சமந்தா fashion disigning மாணவி மற்றும் அமெரிக்கா பெற்றோரின் மகள். இருவரது சந்திப்பும், முட்டி கொள்ளுவதில் ஆரம்பித்து, பின்பு நட்பாக மாறுகிறது. கொஞ்ச காலத்தில் நாயகனுக்கு நாயகி மேலே காதல் வர, அவர் அதை சொல்ல நினைக்கும் போது சில கருது வேறுபாடு காரணமாக இருவரதும், காதல் பிரிந்து விடுகிறது. பின்பு இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. இதை வாசிக்கும் போதே பழைய கதை என நினைக்க தோன்றும். ஆனால், காட்சிகள் கிளைமாக்ஸ் என்று பல இடங்களில் வித்தியாசம் காட்டி இருக்கிறார் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ். அவருக்கு ஒரு சபாஷ் என்றாலும், பல இடங்களில் ரசிகர்களை ஈர்க்காத வகையில் காட்சிகளை வைத்ததுக்கு கண்டனங்களும்!!!
அதர்வா புதிய முகம் என்றே சொல்ல முடியவில்லை. அதுசரி, முரளியின் மகன் ஆச்சே! எல்லா வகை நடிப்பிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார். இவரை இயக்குனர்கள் என்னொரு விஜய், அஜித் போல, மாற்றி விடாது பயன்படுத்தி கொள்ளவும். பல இடங்களில் நமக்குள் ஒருவராக நடித்து இருக்கிறார். படத்தில் காதல் காட்சியிலும் சரி, அம்மாவுடன் பாச காட்சிகளிலும், அவரின் நடிப்புக்கு பாராட்டலாம்.
சமந்தா தெலுங்கின் முன்னணி நடிகை. தமிழுக்கு முழு நடிகையாக இந்த படத்தில் அறிமுகம். அழகோ அழகு! படத்தின் முதல் காட்சியிலேயே முடிவு செய்து விட்டேன் இவருக்கு ரசிகர் மன்றத்தை உருவாக்குவது என்று! அழகில் மட்டுமில்லை, நடிப்பிலும் குறைகள் இருந்தாலும் நடித்து இருக்கிறார். இவரைப்போலேவே, நாயகனின் அம்மா கதாபாத்திரமும், படத்தில் சில காட்சிகள் என இருந்தாலும், வந்து போகும் இடங்களில் மனதை நிறைக்கிறார். முதல் முறையாக அதர்வா அழும் போது "நல்லவங்களுக்குத்தான் அழுகை வரும்" என்று சொல்லும் போதும், தன் மகனை ஊரார் சந்தேகப்படும் போது பிள்ளைக்காக பேசும்போதும், காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.அடுத்து, பிரசன்னா! தமிழ் திரையுலகில் அதிகம் கவனிக்கப்படாத ஒரு நல்ல நடிகர். கொலைகார கும்பலில் தலைவனாக நடித்து இருக்கிறார். அளவான பேச்சு என்று படத்தில் மிரட்டி இருக்கிறார். அதர்வாவின் நண்பனை தவறுதலாக கொன்று விட்ட பின்பு, அதுக்காக அழுது கொண்டே, "கத்தியே தூக்காதிங்க, அது உங்களேயே கொன்றும்!
என்ன ஒரு மனுசனாக மதிக்காதிங்க!" என்று சொல்லி விட்டு போகும் போதும் சரி, கடைசியில் அதர்வாவை காப்பாற்ற அவனுக்கு கத்தியை கொடுக்கும் போதும், கண்களாலேயே நடித்து இருக்கிறார். இறுதி காட்சிகளில் பாசமா? பணமா? என்ற வரும்போதும் அவர் நடிப்பும் சூப்பர்!
கருணாஸ் மற்றும் அதர்வாவின் நண்பர்களும் நகைச்சுவையில் நல்லாவே நடித்து இருக்கிறார்கள். கருணாஸ் நகைச்சுவையில் மட்டுமில்லை, சில உருக்கமான காட்சிகளிலும் மனதில் நிற்கிறார். அப்பா கஜேந்திரனுடன் இவர் அடிக்கு லூட்டிகள் சூப்பர். சில நிமிடம் வந்தாலும் இதயம் முரளி பேசும் இடங்கள் சூப்பர்.
இசையில் யுவன் மட்டுமல்ல பாடல் வரிகளில் வாலி, சினேகன், முத்துகுமார் என்று எல்லோருமே நன்றாக எழுதி இருக்கிறார்கள். படத்தின் உயிரோட்டம் கேடாதவகையில் பின்னணி இசையை போட்டு தாக்கி இருக்கிறார்.
இயக்குனர் பல காட்சிகளில், மனதில் இடம் பிடிக்க முயற்சி செய்த போதிலும், சில சில காட்சிகளால் அந்த நிலையை அவரே தவிர்த்து விடுகிறார். இறுதி நிமிட காட்சிகள், சில காதல் காட்சிகள் என்பன இதில் அடங்கும்.ஆனாலும், எமக்கு தெரியபட்ட காதல் கதை ஒன்றை எடுத்து கொண்டு, எங்கள் ஒவ்வொருவரதும் வாழ்கையில் இருக்க கூடிய ஆகக் குறைந்த ஒரு சம்பவத்தையாவது கோர்வையாக்கி வெற்றி படம் தர எடுத்து இருக்கும் முயற்சி பாராட்ட வேண்டியதே ஆகும்.
படம் வெற்றி படம் இல்லை என்றாலும், இந்த ஆண்டில் வந்த மற்றுமொரு நல்ல படம் இது
"நாம தேடி போற ஒண்ட விட சிலசமயம், நம்மல தேடி வாறது பெரிசா இருக்கலாம்"
Comments