மதராசபட்டினம் - திரை விமர்சனம்

விண்ணை தாண்டி வருவாயா படத்துக்கு பின்பு மீண்டும் பார்க்க கிடைத்த ஒரு அழகிய காதல் கதை!!! ஆர்யா, கிரீடம் இயக்குனர் விஜய் ஆகியோர் மீண்டும் தம்மை நிருபித்து இருக்கும் சோதனையான கதைக்களம் இது! வெற்றி படம் என்று இதை சொல்ல முடியாவிட்டாலும், ஒரு முழுமை அடைந்த திரைக்கதையை கொண்ட ஒரு காவியம்!!!!
படத்தின் கதை 1947ம் ஆண்டுகளில் நடக்கும் கதை! சலவைத்தொழிலாளியாக வரும் ஆர்யாவிற்கும், இந்தியா தேசத்தை ஆளவரும் கவர்னரின் மகளான எமிஜாக்சன் இருவருக்கும் ஏற்படும் காதலை சுற்றியே கதை நகர்கிறது. இறுதியில் இந்திய சுதந்திரபோராட்டங்களால் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட பிரித்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை வருகிறது! அப்படி வெளியேறிய கதைநாயகி 60 வருடங்களுக்கு பின்பு பரிதி எனும் ஆரியாவை இந்தியா வந்து தேடி கண்டறிந்தாரா? இணைந்தார்களா? என்பதே படத்தின் கதை!
1947ல் இந்தியா எப்படி இருந்ததோ அப்படியே செதுக்கி இருக்கிறார்கள். கூவம் நதியின் அழகியகரைகள், சென்னை புகையிரத நிலையம் என்று சொல்லி கொண்டே போகலாம். காதலுக்கு முக்கியத்துவம் தரபட்ட படத்தில் சில ஆங்கில படங்களின் வாசனை எட்டி பார்த்தாலும், இயக்குனரின் கையாள்கையில் அவை ஒரு பொருட்டே இல்லை.
கத்தி மேல் நடப்பது போல ஒரு திரைக்கதையில் நடந்து கிடத்தட்ட விஜய் வெற்றி பெற்றே இருக்கிறார். இந்தியாவின் சுதந்தர போராட்டம் மாசுபடாமல், ஆங்கிலேயர்களை புண்படுத்தாமல், சொல்ல வந்த காதலை நேர்த்தி குறையாமல் சொல்லி செண்டிருக்கிறார் இயக்குனர்.
படத்தின் கதைநாயகன் ஆர்யா என்று சொல்லவதை பார்க்கிலும், ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா என்றே சொல்லலாம். 1947ல் இந்தியா எப்படி இருந்தது என்பதை இன்றைய காலகட்டத்துடன் இணைத்து சொல்ல ரொம்பவே பாடுபட்டிருக்கிறார். அடுத்து ஆர்யா, நடிப்பில் அப்படி ஒரு முன்னேற்றம். பாலாவால் நன்றாகவே பட்டை தீட்டபட்டிருக்கிறார். நடிப்பில் அதிக வேலை இல்லாவிட்டாலும், பல்வேறு பட்ட வகையில் நடிக்க இடம்கொடுத்து இருக்கிறார் இயக்குனர். அதை சரிவர, பயன்படுத்தி இருக்கிறார் ஆர்யா!!!
படத்தின் நாயகி பற்றி சொல்லியே ஆகவேண்டும். எமிஜாக்சன்! இங்கிலாந்திலிருந்து இறக்குமதி என்றே சொல்ல முடியாது! அப்படி ஒரு நடிப்பு! தமிழை பேசுவதாக இருக்கட்டும், பாடல்களில் உதட்டசைவாக இருக்கட்டும், நிச்சயமாக அடித்து சொல்லுவேன் இப்போதைய தமிழ் நாயகிகள் இவரிடம் கொஞ்சம் பிச்சை எடுக்கத்தான் வேண்டும்! எண்ணமாக உணர்ச்சிகளை கொட்டி தீர்க்கிறார். உண்மையில் அழகான காட்டு சிறுக்கி இவர்தான்!!! படம் முழுவதுமே மனதை கொள்ளை அடித்து செல்லுகிறார். தமிழைஆர்யாவுக்காக படிக்குமிடமாக இருக்கட்டும், ஆர்யாவுக்காக காதலை திறந்து இறுதி காட்சியில் அவரை தப்பிக்க வைக்கும் காட்சியிலும் நடிப்பில் பின்னிஎடுத்து இருக்கிறார்.இவரை பொருத்தமான வகையில் பயன்படுத்திய இயக்குனர் விஜய்க்கு ஒரு சபாஷ்!!!
படத்தில் நடித்து இருக்கும் ஏனைய ஆங்கிலேயே கதாபாத்திரங்களும் படத்துக்கு உயிர்நாடி! இலகுபடுத்தபட்ட ஆங்கிலத்தில் குறுகிய வசனங்களில் சொல்லவந்ததை சொல்லி இருக்கிறார்கள். இவர்கள் தமிழ் நடிகர்களுக்கு போட்டி போட்டு கொண்டு நடித்து இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
நாசர்,ஹனிபா,M.S.பாஸ்கர் என்று ஒரு பட்டாளமே நடித்து இருக்கிறார். அனைவருமே தங்கள் பணியை கச்சிதமாக செய்து இருக்கிறார்கள். அளவுக்கு மீறாமல் நடிப்பு இதுதான் படத்தின் மிகப்பெரிய பலமே!
படத்தில் நகைச்சுவை என்று தனியாக இல்லாமல் கதையின் ஒரு அங்கமாக நகைச்சுவை வந்து செல்லுகிறது.ஹனிபா வரும் இடங்கள் நிச்சயமாக சிரிப்பை வரவழைக்கும் இடங்கள். ஆரியா ஆங்கிலம் படிப்பதும் உட்பட…….! இந்த படத்துக்கு பிறகு அடாவடி ஆங்கில வாத்திகள் கொஞ்சம் கவனம்! ஆர்யாவின் நண்பர்களாக வருபவர்களும் நக்கல்,நகைச்சுவையில் பின்னி இருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் நடிக்கும் நடிகர்கள் உட்பட அனைவரும் வழங்கபட்டதை அளவோடு செய்து தந்து இருக்கிறார்கள்.


படத்துக்கு இசை G.V. பிரகாஷ். சொல்லும்படியாக பாடல்கள் படத்தில் இருக்கிறது. ஆனாலும், இப்படியான ஒருபடத்துக்கு இவரை விட சிறந்த இசையமைப்பாளரை விஜய் நாடி இருக்கலாம். ஆனால் இவரும் சோடை போகவில்லை. பல இடங்களில் தனித்துவமாக தெரிந்தாலும், ஏதோ ஒன்று இசையில் தவறுவது போல ஒரு உணர்வு!!! “வாம்மா தாய்ம்மா”, “மேகமே", "ஆருயிரே” பாடல்கள் அருமை. தீம் பாடல் மனதை விட்டே அகலவில்லை.

கல்பாத்தி அகோரம் சகோதரர்களுக்கு இது இரண்டாவது காலப்படம். வெற்றி என்பது ரசிகர்களில்தான் இருக்கிறது! ஆனால், இப்படி ஒரு படத்தை துணிந்து எடுப்பதே ஒரு பெரிய வெற்றிதான்!!!

இந்த மதராசபட்டனத்தில் சஞ்சரிக்கும் அனைவருக்குமே இது ஒரு காதல்காலப் படமாக ஏதோ ஒன்றை படத்தின் இறுதியில் மனதை தொட்டு சொல்லுவதில் இயக்குனர் வெற்றி பெற்று இருக்கிறார்.


மதராசபட்டினம் - மொழி கடந்த உண்மை காதலின் ஒரு காலப் பயணம்!!!

Comments

Subankan said…
படத்தைப் பாத்துடலாம் எண்டுறீங்களா? பாத்துட்டாப் போச்சு :)
படம் பெரிய அளவு பேசப்படுவதாக தெரியவில்லை. ஆனால் உங்கள் விமர்சனம் நம்பிக்கை ஊட்டுகிறது.
உங்க‌ள‌ ந‌ம்பி போரேன்
Bavan said…
ம்.. பாத்திடுவம்...:)
Anonymous said…
நல்ல விமர்சனம்

கேபிள் சங்கர்
anuthinan said…
//Subankan said...
படத்தைப் பாத்துடலாம் எண்டுறீங்களா? பாத்துட்டாப் போச்சு :)//

//Bavan said...
ம்.. பாத்திடுவம்...:)//

படத்தை நிச்சயம் பார்க்கலாம்!!! தூய காதலுக்காக!!!

நன்றி இருவரது வருகைக்கும்,கருத்துக்கும்...
anuthinan said…
//Karthick Chidambaram said...
படம் பெரிய அளவு பேசப்படுவதாக தெரியவில்லை. ஆனால் உங்கள் விமர்சனம் நம்பிக்கை ஊட்டுகிறது//

அண்ணா உங்கள் புதிய வரவுக்கு முதலில் நன்றிகள்!! விமர்சனதிலேயே சொல்லி இருக்கிறேன் படம் பெரிய வெற்றியை பெறப்போவது இல்லை!!!

தரமான ரசிகனின் ஆவலை பூர்த்தி செயும்
anuthinan said…
//அக்னி பார்வை said...
உங்களை நம்பி போறேன்//

நிச்சயமாக நீங்கள் போகலாம்
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
anuthinan said…
//Anonymous said...
நல்ல விமர்சனம்

கேபிள் சங்கர்//

அண்ணாவின் வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி!!! உங்கள் வருகை தொடரட்டும்