வாழ்க்கையில் நடமுறைக்கே ஒத்துவராத பாத்திரம். ஆனாலும், சிலவேளைகளில் நாம் இப்படி இருந்தால் நல்ல இருக்குமே! என்று யோசிக்க தோணும்!! அந்த கதாபாத்திரம்தான் தில்லாலங்காடியில் ரவி ஏற்று இருக்கும் கதாபாத்திரம்!
படத்தை பார்க்க போகிறவர்களுக்கு ஒரு விடயம்!!! ஆங்கில படங்களில் எப்படி லாஜிக் மீறல்களை சகஜமாக எடுத்து பார்க்கின்றீர்களோ!!! அப்படியே படத்தை பாருங்கள். சில இடங்களில் படத்தை இப்படித்தான் பார்க்க வேண்டி இருக்கிறது! இப்பை ஒரு அப்பா, அம்மா, காதலி,நிஜ வாழ்கையில் அமைவது ரொம்ப கஷ்டம்!!!
தெலுங்கிலிருந்து படத்தை ரீமேக் செய்திருந்தாலும் , படத்துக்காக நிறையவே
உழைத்து இருக்கிறார்கள். வசனம் அமைத்தவர் யார் என்று தெரியவில்லை. எல்லாமே சூப்பர்! ஆனால், முதல் 15 நிமிடங்கள் மட்டும் சொதப்பல்! படத்தை பார்க்க தொடங்கிய ஆரம்பத்தில் ஏண்டா பார்க்க வந்தோம் என்று இருந்தது. படத்தை பார்த்து முடித்த பிறகு அப்பவே போயிருந்தா மிஸ் பண்ணி இருப்போமே என்று இருந்தது!!!படத்தின் படி, ரவி கிக்குக்காக அலையும் ஒரு இளம்பையன். அவருக்கு எதையுமே, கிக்காக,சுவாரசியமாக வாழ்க்கையில் பண்ண வேண்டும் என்ற விருப்பம். அப்படியே அவர் போக்கில் வாழ விடும் ஒரு குடும்பம்!!! அப்பாவாக பிரபு,அம்மா சுகாசினி! நடிப்பில் பிரபுவுக்கே அதிக வாய்ப்பு அதை அவர் சரியாகவே செய்து இருக்கிறார். தமன்னா ரவியின் காதலி, ஆரம்பத்திலிருந்தே முட்டி கொண்டு பின்பு காதலித்தாலும், அவர்களுக்குள் ஏற்படும் கருது வேற்றுமை அவர்களை பிறித்து விடுகிறது. அதற்க்கு பிறகுதான் கதையில் சுவாரசியமே காத்து இருக்கிறது. காதலர்கள் இனைந்தார்களா? ரவி வாழ்கையில் தேடும் கிக் எங்கு கிடைத்தது? ரவியின் உண்மை கதை என்ன? ஏன் அவர் அப்படி மாறினார்?என்று எல்லாம் தெரிய வருகிறது.
படத்தில் தமன்னாவுக்கு பெரிதாக அலட்டி கொள்ளும் வேடமில்லை. ஆனால்,வாசகங்கள் பல பேசி மனதில் இருக்கிறார். படம் முழுவதுமே ந
கைச்சுவைக்கு பஞ்சமில்லை. பிரபு,வடிவேலு,மன்சூர் அலிகான்,சந்தானம்,லிவிங்ஸ்டன் இவர்களுடன் போதாததுக்கு, ரவி வேறு!! சந்தானம் memory loss நபராகவும், வடிவேலு தமனாவை காதலிக்கும் நபராகாவும், பின்பு தனது மனைவியின் தம்பி சியாமுக்கு நிச்சயம் செய்யபட்டவர் இவர் என்று தெறித்த பின்பும், நகைச்சுவையில் பின்னி எடுக்கிறார். நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லை.அடடா!!! நம்ம ஷியாம் பற்றி சொல்லவே மறந்துட்டனே! அவர் பற்றி சொன்னால் படத்தில் இருக்கும் கிக் உங்களுக்கு போய் விடும். அதனால்,அவர் படத்தில் நேர்மையான போலிஸ் அதிகாரி. நடிப்பில் கலக்கி இருக்கிறார். இவ்வளவும் போதும் மீதியை படத்தில் பாருங்கள்.
யுவனின் இசை என்னை பெரிதாக கவரவில்லை, இரண்டு பாடல்கள் நன்று. ஒரு பாடல் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டதாக சொன்னார்கள். பார்த்தேன் பாடல் முழுவதும் அவர்கள்
உழைப்புதான் தெரிந்தது, வழக்கம் போல ரவியின் பாடல்களுக்கான லோக்கேசன் தெரிவு அருமை! தமன்னா பாடல்களில் தாராளம் காட்டி இருக்கிறார்.படத்தில் எங்குமே தொய்வு என்று சொல்லுவதுக்கில்லை. ஆரம்ப காட்சியில்தான் ரவி கொஞ்சம் அலுப்படிக்கிறார். சில வாசகங்கள் நிஜ வாழ்கையை நமக்கு காட்டி நிற்கிறது. பிரபு ஒரு இடத்தில் சொல்லுவார்.
“நான் Engineer ஆகணும் எண்டுதான் ஆசைபட்டேன். ஆனா, Bankலதான் வேளை கிடைச்சுது. போதுமான வருமானம், அமைதியான வாழ்க்கை!! எந்த குறையுமே இல்லை. ஆனா, பகல் போய் இரவு வரும் போது தூக்கத்துக்கும், விளிப்புக்கும் இடையில் மனசுக்குள நினைச்சத சாதிக்கல என்று நடக்கிற போராடம் இருக்குதே அத போல வலி எதுவுமே இல்லை.” உண்மைதான் இல்லையா?
அதே போல, தமன்னா சொல்லும் ஒரு இடம் “ எல்லாருமே காதலிக்கும் போதுதான் I LVE U சொல்லுவாங்க! ஆனா, நான் மட்டும்தான் பிரியும் போது சொல்லுறன் I LVE U! but I HATE U!
இதே போல், நிறைய இடங்களில் எனக்கு பிடித்து இருந்தது. படம் எல்லோரையும் கவரத்தக்க வகையில் எடுக்கபட்டிருக்கிறது. ஆகவே, எல்லாருக்குமே பிடிக்கும் என்று இல்லை. என்னை பொருத்தவரை,
தில்லாலங்கடி – நம்மளால செய்ய முடியாத மத்தவங்க செய்யும் போது கைதட்டி ஆதரிக்கணும்! முடியலையா ரசிச்ட்டு போய்ட்டே இருக்கணும்!
Comments
ஆனாலும் நல்லா இருக்கு பார்ப்போம் சந்தர்ப்பம் கிடைத்தால் பார்ப்பதற்கு