ராவணன் – திரை விமர்சனம்

ராவணன் முதல் காட்சியை பார்க்க முடியாவிட்டாலும் மதிய காட்சிக்கு டிக்கெட் எடுத்து போய் பார்த்துவிட்டேன். நான் எதிர்பாரத்தது போலவே ராவணன் ரொம்ப நல்லவனாக இருக்கிறான். ஆனால், மணி முழுமையாக எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதும் உண்மை.


கதை 



வழக்கமான எல்லாருக்கும் தெரிந்த ராமாயண கதை நவீன கதாபாத்திரங்களுடன் தொடர்புபடுத்தி எடுக்கபட்டுள்ளது. தாழ்த்தபட்ட காட்டுவாசிகள் கூட்டத்திலிருக்கும் விக்ரம் ராவணனாக உருவகிக்கபட்டு, போலீஸ் அதிகாரியான பிருத்திவிராஜ்யுடன் மோதுகிறார். மக்களுக்கு நல்லவனாகவும், போலீசாருக்கு கெட்டவனாகவும் தெரியும் விக்ரமை பிடிக்கும் முயற்சியில் பலிக்கடாவாக்கபடும் ப்ரியாமணிக்காக(சூர்ப்பனகை) பழிவாங்க புறப்படும் விக்ரம் ப்ருத்திவியின் மனைவி(சீதை) ஜஸ்வரியாராய்யை கடத்தி விடுகிறார். அவரை பிருத்திவிராஜ் மீடாரா? இல்லையா? என்றே கதை நகருகிறது. முன்னா, (விபுசணன்) கார்த்திக் (அனுமான்) , பிரபு இவர்களும் கதையில் பேரும் பங்கு வகிக்கிறார்கள்.


நடிப்பு
மணிரத்தினம் படத்தில் நடிப்பு பற்றி கேட்கவும் வேண்டுமா? அனைவருமே சிறப்பாக நடித்து இருக்கின்றனர். வீராவாக வரும் விக்ரம் படம் முடிந்து வரும் வேளையிலும் ஹீரோவாக இருக்கிறார். மனிதர் நடிப்பில் எல்லாரையும் தூக்கி சாப்பிடுகிறார். அவருக்கு இணையாக நடித்தவர் நம்ம ஜஸ் மட்டுமே! ஜஸ் காதல் சொல்லுமிடங்கலானாலும் சரி! விக்ரமை பயமுறுத்தும் இடங்களானாலும் சரி தான் ஒரு கைதேர்ந்த நடிகை என்பதை நிரூபிக்கிறார். நியமான உலக அழகு ராணி அவர்தான்! இறுதி விக்ரம்-ஜஸ் தோன்றும் காட்சிகள் அருமை! விக்ரமுக்கு ஜஸ்வரியாராய் மேல் காதல் வரும் இடங்களிலும் சரி! காதலை சொல்லாமல் சொல்லி அவரை அங்கேயே இருக்கும்படி கெஞ்சும் காட்சிகளிலும் சரி மனிதர் உணர்ச்சிகளை கொட்டுக்கிறார். பிருத்வி போலிஸ் அதிகாரியாக மிரட்டி இருக்கிறார். காதல் சொல்லும் இடங்களில் அழகோ அழகு! ஆனால், ஏனோ மனதில் ஒட்டவில்லை (ராமராக அவர் காட்டாபட்டமையோ!). கார்த்திக் மீண்டும் தன்னை நிருபித்து இருக்கிறார். ஆனால், அவரை அனுமாராக காட்ட வேண்டும் என்பதற்காக வைக்கபட்ட சில காட்சிகள் தேவையற்றவை. பிரபு படம் முழுவதும் வந்து சிறப்பாகவே தனது வேலையை செய்து இருக்கிறார். பிரியாமணிக்கும் தன்னை நிருபிக்க இந்த படத்தில் பழ வாய்ப்புகள் வழங்கபட்டு அதை அவர் சிறப்பாக நிருபித்து இருக்கிறார்.ராமாயணத்தின் தழுவல் என்பதை காட்ட பல காட்சிகள் படத்தில் காண்பிக்கபடுகிறது. தூது பேச வரும் முன்னாவை பிருத்திவிராஜ் கொல்லுமிடம் ஏனோ உறுத்துகிறது. ராவணனை பல இடங்களில் அழகாக காட்ட மணி பல இடங்களிலும் முயற்சி செய்து இருக்கிறார். இறுதி பால காட்சிகள் படத்துக்கு மேலும் பலம். கிளைமக்ஸில் ரகுமான் குரலில் ஒரு பாடல் சூப்பர்! இன்னமும் அதை இணையத்தில் தேடி கொண்டு இருக்கிறேன் கிடைக்கவில்லை.

இசை & பாடல்

வைரமுத்து, ரஹுமான் ஆகியோர் படத்தின் பலம். பாடல்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. பின்னணி இசையில் ரஹுமான் கலக்கோ கலக்கியிருக்கிறார். காட்டு சிறுக்கி பாடல் ஏனோ படத்தில் வரவில்லை. அதே போல, உசிரே போகுது பாடல் படத்தில் இடம்பெற்ற இடமும் சரியாகவில்லை.

கேமரா,கலை & ஒளிப்பதிவு

படத்தின் அடுத்த பலம் இவைதான்! ராவணன் படத்தில் நடிக நடிகைகளுடன் இவையும் ஒரு அங்கமாகவே இருக்கிறது. சந்தோஷ்சிவன் தனது முழுத்திறமையையும் வெளிபடுத்தி இருக்கிறார். போடபட்ட செட், படம்பிடிக்கபட்ட இடங்கள் என்பவை யாரும் ஊகிக்க முடியாத இடங்கள்! படத்தின் மிகப்பெரிய பலமே இவைதான்!

மணிரத்தினத்தின் மிகப்பெரிய பிரமாண்டம் படத்தில் தெரிகிறது. அனைவரினதும் உழைப்பு நிஜமானது. ஆனால்,ஏனோ பழக்கபட்ட கதையின் உணர்வும், அடுத்த காட்சிகள் முன்பே சில இடங்களில் ஊகிக்க முடிவதினாலும், மணியிடம் நாங்கள் எதிர்பார்த்ததை முழுமையாக பெற முடியவில்லை. மணிரத்தினம் என்ற பெரிய இயக்குனரின் வட்டத்துக்குள் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கிறது. இது சில இடங்களில் படத்தில் ஓட்டை ஏற்படவும் காரணமாகிறது. இவையெல்லாம் தவிர்த்திருந்தால் மணி மற்றொரு மாற்றத்தை சினிமாவில் மீண்டும் ஏற்படுத்தி இருப்பார்.

ராவணன் பலருக்கும் தெரியாத நல்லவன் 

Comments

அருமை.
பகிர்வுக்கு நன்றி ,
Unknown said…
உங்க விமர்ச்சனத்த பார்த்தவுடன் படம் பார்க்கனுன்னு கிளம்பிட்டேன். நன்றி. :)
படம் பார்த்து கதை சொல்லல என்பது இதுதானோ?
உங்களளவுக்கு எனக்குப் பிடிக்கவில்லை வழமையான மணிரத்தினம் படங்களில் இருக்கும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்