சிங்கம்
பார்க்கலாம்
சிங்கம் திரைப்படம் வழமை போல ஹரி வழங்கியிருக்கும் மற்றொரு மசாலா படமே இது! விஜயை வைத்து படமெடுப்பவர்கள் கூட பார்த்து பழகிய மசாலா கதையை எப்படி படமாக்க வேண்டும் என்று இவரிடம் கற்று கொள்ளலாம்! ஹரி சிங்கத்தில் விக்ரம் நடித்த சாமியின் பாதிப்பு இருக்க கூடாது என்று முயற்சி செய்தாலும் கதை சாமியை நாடியே செல்லுகிறது! அச்சு அசல் அக்மார்க் பழைய கதை! ஆனால் ஏனோ இருக்கையை விட்டு எழும்ப விடாமல் கதையை நகர்த்தி இருக்கும் ஹரிக்கு எப்படி வாழ்த்து சொல்லுவது என்றே தெரியவில்லை!!!!
அஜித்,விஜய் போன்ற பெரிய மசாலாக்களை வைத்து படம் எடுப்பவர்களே ஆகக் குறைந்தது இப்படியாவது படம் எடுக்க கற்று கொள்ளுங்கள்!!! அப்போதுதான் அவர்கள் இமேஜ் காலியாகாமல் படம் ஓடும்!!!
சூரியாவின் 25வது படம் வசூலுக்கு மோசமில்லாமல் ஓடி விடும் என்பதுக்கு ஹரி உத்தரவாதம் தந்து இருக்கிறார். பார்த்து ரசிக்க கூடிய படம்! சூர்யா நடிப்பில் எவ்வளோ திறமையாக நடித்து இருக்கிறார். காக்க காக்க சூர்யாவுக்கும் இந்த சூர்யாவுக்கும் இடையில் நிறையவே வேறுபாடு காட்டி இருக்கிறார். அனுஷ்கா நிறையவே காட்டி இருக்கிறார். ஆனால், ரொம்பவே நடித்தும் இருக்கிறார். இவர், தமிழில் நடித்த சிறந்த படம் இதுவாகத்தான் இருக்கும்.(அருந்ததி தமிழ் ரீமேக் தவிர்த்து) இந்த அழகு தேவதை தொடர்ந்து தமிழில் படங்கள் நடித்தால் தமன்னா கூட இவரை நெருங்க முடியாது. காரணம்,நடிக்க தெரிந்த சில நடிகைகளில் இவரும் ஒருவர்!!!
இதை விட நகைச்சுவையில் விவேக் பின்னி இருக்கிறார். கடந்த படங்களுடன் ஒப்பிடும் போது மனிதர் கொஞ்சம் திருந்தி விட்டார் போல இருக்கிறது! கொஞ்சம் குண்டாகவும் ஆகியிருக்கிறார். இப்படி விவேக் காமெடிகளை செய்தால்தான் மறுபடியும் தனது விட்ட இடத்தை பிடிக்க முடியும். பல இடங்களில் ஹரியின் படங்களில் வரும் வடிவேலுவாகவே தெரிகிறார்???.
படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்து இருக்கிறார். பிரகாஷ்ராஜ் நல்லாவே வெளுத்து கட்டி இருக்கிறார். அறிமுக காட்சி பிரமாதம். சூரியாவின் அறிமுக காட்சி பார்த்து பழகிய ஒன்று!!
கதைப்படி சூர்யா அப்பாவுக்காக போலீஸ் அதிகாரியாகி அவர்கள் ஊரிலேயே போலீஸ் கடமையில் ஈடுபடுகிறார். கிராமத்தில் இவர் சிறந்த போலீஸ் அதிகாரியாக செயல்பட்டு கொண்டு இருக்கையில், அந்த ஊருக்கு வரும் கதாநாயகியுடன் ஒரு காதல் ஏற்படுகிறது, பின்பு நகரத்தில் வில்லத்தனம் பண்ணும பிரகாஷ்ராஜ் செய்த ஒரு தவறுக்காக சூரியாவின் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட வருகையில் முட்டி மோதி கொள்ளுகின்றனர். பின்பு வழமை போல ஹரி பட அடிதடிகள் , பஞ்ச் வசனங்கள், பாடல்கள் என்று முடிவை நோக்கி நகர்கிறது!
நாயகிக்கு பல காட்சிகளில் நடிக்க இடம் கொடுத்த ஹரிக்கு பாராட்டுக்கள். இசை பரவாயில்லை. பாடல்கள் எனக்கு பிடித்து இருக்கின்றன. தேவி பிரசாத் ரொம்ப கஸ்டா பட்டது போல இருக்கிறது !!!! எடிட்டிங் பிடிக்கவில்லை.
படத்தில் புத்தகத்தை தலைகீழாக வைத்து சூர்யா கையெழுத்து போடுவது அபாண்டம்! இப்படி சிலபல குறைகள் இருந்தாலும், வசூலில் சன் பிக்சர்ஸ் & திரை அரங்கு உரிமையாளர்களையும் சிங்கம் சீறிப்பாய்ந்து காப்பாற்றி விடத்தான் போகிறது!!!


Comments
waste
ஒரு விடயத்தை விஜய் செய்தால் தவறு சூர்யா செய்தால் சரியா ................
சூர்யாவும் காலி ஆகும் நாள் வந்துள்ளது என்றே நினைக்கிறேன் .......ஆதவன் சிங்கம் உறுதி படுத்துகின்றன .ஆதவன் உதயநிதி ஸ்டாலின் , அதற்க்கு முன் வாரணம் துறை தயநிடி
அயன் சன் , சிங்கம் சன் , தனியாக வந்தால் சூர்யா யாரென்று தெரியும் , சிங்கம் அவருக்கு ஒத்ஹு வரவில்லை ............
useless review
waste//
நண்பரே என் விமர்சனங்களை தர முய்ரத்த முயற்சி செய்கிறேன்
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
// வெண்ணிற இரவுகள்....! said... //
என்னை அல்லது இலங்கை ரசிகர்களுக்கு சிங்கம் வெற்றி படமே! எந்த ஒரு நடிகனும் தொடர் வித்தியாசமான படங்களை தருவதிலும் பார்க்க இடைக்கிடையில் மசாலா படங்கலயும் தருவது சிறந்தது! சூர்யா எல்லாவற்றுக்கும் தான் பொருத்தமானவர் என்று நிருபித்து இருக்கிறார்
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
//
அனு முற்றிலும் சரியான விமர்சனம் சூர்யா ஹரி இருவரும் அறற்புதமான ஒரு பொழுது போக்கு படத்தை தந்திருக்கிறார்கள்.. சிங்கம் II எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை .. எடுப்பார்கள் என நம்புகிறேன் !!
//
நிச்சயமாக அடுத்த பாகத்தை வேறு ஒரு பெயரில் பார்க்கலாம் !!!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி