Saturday, October 6, 2012

#WT20 – இறுதி தருணங்கள்


உலக டுவென்டி டுவென்டி தொடரின் இறுதிப்போட்டி நாளைய தினம் இடம்பெற இருக்கிறது! இதன்மூலம், கடந்த சில வாரங்களாக தேசிய அணிகள் தமக்குள்ள நடாத்தி வந்த பலப்பரீட்சைக்கு முடிவுகள் எட்டபட்டு, இனிவரும் இரண்டு வருடங்களுக்கு யார் சாம்பியன் என்று தெரிந்துவிடும்! என்னதான் நாடுகள் நடாத்தும், IPL, SLPL, BPL, BBL, போன்றவற்றை பார்த்தாலும், இப்படியான ஒரு டுவென்டி டுவென்டி தொடரில் மட்டுமே, தங்களுடைய நாடு என்று ரசிகர்களை ஒன்றிணைத்து, வேறு எந்தவகை போட்டியிலுமில்லாத வகையில், ஒரு சுவாரசியத்தை வழங்கியிருக்கிறது என்று சொல்லலாம்!

இம்முறை இறுதிப்போட்டிக்கு வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற போட்டியில், இலங்கை வெற்றி பெற்று, இறுதிப்போட்டியில் விளையாட கூடிய இரேண்டாவது சந்தர்ப்பத்தை பெற்று கொள்ள, நேற்று இடம்பெற்ற போட்டியில், ஆஸ்திரேலியாவை வெற்றி கொண்ட மேற்கிந்திய தீவுகள் முதல் தடவையாக டரன் சமி தலைமையில் ஒரு உலகக்கிண்ண தொடரின் இறுதிபோட்டிக்கு மிகநீண்டகாலத்துக்கு பிறகு வருகை தந்திருக்கிறார்கள்! மிக பெரிய ஆச்சரியம் என்று சொல்லலாம்! ஒரு காலத்தில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் உலகை கலக்கி கொண்டிருந்த காலம் மாறி, அப்படி ஒரு அணி இருக்கிறதா? என்று தரபடுத்தல்களில் தேடவைத்து விட்டு, இப்போது மீளவும் விஸ்வரூபம் எடுத்து வந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்! எனவே, இந்த இரண்டு அணிகளும் முட்டிமோதி தங்கள் உலககிண்ண கனவுக்கு விடை தேட போகிறார்கள் கூடவே, நாங்களும் சேர்ந்து கொள்ள போகிறோம்! J

இலங்கை அணி, மிக சிறந்த மகேலவின் வழிகாட்டல் மூலம், மீளவும் ஒருமுறை இறுதிபோட்டியை விளையாடும் சந்தர்ப்பத்தை பெற்று, இருக்கிறார்கள்! திட்டமிட்டு பாகிஸ்தான் அணியை வீழ்த்திய பிறகு, அவர்களுக்கு யாரை அரையிறுதியில் சந்திக்கக் போகிறோம் என்று காத்திருந்தவர்களுக்கு, அது மேற்கிந்திய தீவுகள் அணி என்பது கொஞ்சம் அதிர்ச்சியான விடயம்தான்! காரணம், ஆஸ்திரேலியா தெரிவு செய்யபட்டிருந்தால், இலங்கையின் சுழல்பந்துவீச்சு வரிசையை கொண்டு, ஏதாவது மாற்றங்களை செய்து வெற்றியை பெற்று கொள்ள கூடியதாக இருக்கும்! ஆனால், இப்போதோ, தெரிவாகியிருக்கும் அணி, இம்முறை உலககிண்ண டுவென்டி டுவென்டி போட்டிகளின் SUPER 8 போட்டிகளில் சந்தித்து, தோல்வியை தனதாக்கி கொண்டிருந்தாலும், அவர்கள் தங்கள் பலவீனத்தையும், இலங்கையின் பலத்தையும் நிச்சயமாக நன்கு கணித்திருப்பார்கள்! எனவே, அவர்களுக்கு எதிராக போராட வேண்டிய அவசியம் நிச்சயம் மகேல தலைமையிலான, அனுபவமிக்க புதிய இலங்கை அணிக்கு இருக்கிறது! இதைவிடவும், பிரமேதாச மைதானத்தில் நேற்றைய அரையிறுதி போட்டிக்கு பின்பு, கெயில் புயல் மையம் கொண்டிருப்பதாக தெரிகிறது! அதுமட்டுமல்லாது, ரவி ராம்போல் சிறப்பாக சிந்தித்து பந்துவீசியதையும், கொஞ்சம் போர்முக்கு திரும்பியது போல இருப்பதும், கடந்த முறை இலங்கை அணி எதிர்கொண்டது போல, இம்முறை மேற்கிந்திய தீவுகள் அணியிருக்காது என்பது மட்டும் நிச்சயம்! எனவே, மகேல, சங்கா ஆகிய இருவருமே நடைபெற போகின்ற இறுதிப்போட்டிக்கு தம்மை என்னும் புதிய திட்டங்களுடன், அணியையும் இணைத்து தயார் செய்துகொள்வது, அவசியமாகிறது!

குறிப்பாக, சங்கா, டில்சான், மகேல, ஹேரத், போன்ற மூத்த வீரர்களுக்கு இது இறுதி டுவென்டி டுவென்டி உலககிண்ணம் என்று சொல்ல முடியாது விட்டாலும், இது போல ஒரு வாய்ப்பு, அதுவும் சொந்த மைதானத்தில் அரங்கு நிறைந்த தங்கள் ரசிகர்களுடன் விளையாடி, கிண்ணத்தை வெல்ல கூடிய வாய்ப்பு இனி அமையாது என்றே, சொல்லலாம்! எனவே, மூத்த வீரர்கள் மட்டுமல்ல, இளையவர்களும் இதை உணர்ந்து எதிர்வும் இறுதிப்போட்டியில் செயல்படுவார்கள் என்று நம்பலாம்!
மேற்கிந்திய தீவுகள் அணி, ஆச்சரியபடவைக்கும் அணி! டரன் சமி என்கிற குழந்தைத்தனமான அணித்தலைவன் முன்னால், அணிவகுத்திருக்கின்ற ஒரு பலாமான கட்டமைப்பான அணி! கெயில், சாமுவேல்ஸ், நரைன், பிராவோ இவர்களை எல்லாம் T20 SPECIALIST என்றே வர்ணிக்கலாம்! இப்படி பலர் ஒரே அணியில், அமைவது அபூர்வம்! அப்படி அமையும் போதே, அதை வரலாற்றில் முக்கியத்துவம் பெற வைத்துவிட வேண்டும்! அப்படி செய்ய வேண்டும் என்ற, எண்ணத்துடன்தான் இம்முறை களமிறங்கியிருக்கிறார்கள்! ஆஸ்திரேலியா அணிக்கெதிராக, பாகிஸ்தான் பயன்படுத்திய அதே சுழல் உத்தியை ஆரம்பம் முதலே பயன்படுத்தி, அவர்களை தடுமாற வைத்து, பின்பகுதியில், வேக மற்றும் நடுத்தர வேக பந்துவீச்சாளர்களின் உதவியுடன் அவர்களை சுருட்டி, மிக பலம்வாய்ந்த அணி போன்ற பிரமையுடன் இறுதி போட்டியில் இலங்கையை சந்திக்க காத்திருக்கிறது!

மிக சிறந்த அனுபவசாலி தலைவர் என்று மகேலவை சொல்ல முடியுமோ? அதே அளவுக்கு சிறந்த ஊக்குவிப்பாளனாக இருக்க கூடிய, சோர்ந்து விடாத ஒரு சிறந்த தலைவராக சமியை சொல்ல முடியும்! என்ன, எல்லா திறமைகளும் நேற்றைய அரையிறுதி போல, ஒரே சந்தர்ப்பத்தில் வழிபட்டு விட்டால், இவர்கள்தான அடுத்த உலக டுவென்டி டுவென்டி சாம்பியன்ஸ்! இலங்கைக்கு எதிராக புதிய வியூகம் ஒன்றை பந்துவீச்சில் நிச்சயம் அமைக்கவேண்டும் என்பதை, பாகிஸ்தான் – இலங்கை போட்டிக்கு பின்பு, மேற்கிந்தியதீவுகளுக்கு நன்கு தெரிந்திருக்கும்! எனவே, நிச்சயமாக புதிய உத்வேகம் பெற்று இருக்க கூடிய அணி, T20 SPECIALIST உதவியுடன் இம்முறை ககிண்ணத்தை கைப்பற்ற முழுமையாக போராட தயாராக இருக்கிறது என்று நம்பலாம்! அதிலும், குறிப்பாக, அரையிறுதி போட்டியில், நாயகனாக கெயில் தெரிவுசெய்யபட்ட பின்பு, இலங்கை ரசிகர்களே, கிண்ணம் எங்களுக்குத்தான இதை சொல்வதற்கு மனிக்கவும்! என்று தைரியமாக சொல்லியிருப்பது வரவேற்ககூடியதாகும். எனவே, நிச்சயமாக ஒரு ஆரோக்கியமான டுவென்டி டுவென்டி இறுதிப்போடியை இம்முறை நாம் எல்லோரும் பார்க்க இருக்கிறோம் என்று சொல்லலாம்!

இரு அணிகளும் இதுவரை, நான்கு இருபதுக்கு இருபது போட்டிகளில் (டுவென்டி டுவென்டி  உலககிண்ண போட்டிகள் அடங்கலாக) பங்குபற்றி இருக்கிறார்கள்! நான்கிலுமே, இலங்கை அணிக்கு வெற்றி என்பது எமக்கு இருக்க கூடிய, ஒரு உளவியல் ரீதியான பலமாகும்! ஆனாலும், இதில் மூன்று போட்டிகளில் மட்டும் கெயில் விளையாடி இருந்தாலும், அந்த போட்டி அனைத்திலும் இலங்கை வெற்றி பெற்று இருக்கிறது! இலங்கை அணியை பொறுத்தவரையும், சரி மேற்கிந்தியதீவுகளை பொறுத்தவரையும் சரி இறுதியாக விளையாடிய அணியை எந்தவித மாற்றங்களும் செய்யாமல்தான் ஈடுபடுத்த பெரும்பாலும் விரும்புவார்கள்! அது போல, இரண்டு அணிகளும் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு பகபெரிய பொறுப்பை வழங்கியிருக்கிறது  என்றே, சொல்லலாம்! சிலசமயங்களில் மேற்கிந்திய தீவுகள் பக்கம் டுவேன் சிமித் மேலதிகமாக உள்ளே வரக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கிறது! அதுபோல, இலங்கையில் அகில தனஞ்ச்செய்ய உள்ளே வருவது சந்தேகம் என்றாலும் உள்வாங்கபடமாட்டார் என்று சொல்ல முடியாது!
அது போல, பிரேமதாச மைதானத்தில் இலங்கை ஐந்து போட்டியில் ஒரு போட்டியையும், மீதி நான்கில் தோல்வியையும் கண்டிருக்கிறது! மேற்கிந்திய தீவுகள், மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவுகளற்ற போட்டியாக உள்ளது! இதனடிப்படையில், பார்க்கும் போது கூட, இரண்டு அணிகளும் சமநிலையாக உள்ளது என்றே சொல்லலாம்! நாளைய ஆடுகளம், ஆடுகளத்தின் ஹீரோ? இவர்கள்தான் நிச்சயம் போட்டியை தீர்மானிக்க போகின்றவர்களாக இருக்கப்போகிறார்களே தவிர, எங்கள் எதிர்வுகூறல்கள் அல்ல!
இந்த போட்டியில் வெல்லப்போவது யார்? :P

இலங்கையின் அனுபவவீரர்களான சங்கா, மகேல, டில்சான் போல, அதிக அனுபவங்களை கொண்டவர்கள் மேற்கிந்திய தீவுகளில் குறைவு என்றால், கெயில், சாமூவேல்ஸ் போன்ற மிக அதிரடியான துடுப்பாட்ட பிரயோகம் இலங்கை பக்கம் குறைவே என்று சொல்லலாம்!

இவ்வாறு பல மர்மங்களை கொண்ட டுவென்டி டுவென்டி உலககிண்ண போட்டிகளின் அனைத்து வித்தைகளுக்கும், முடிவு, எதிர்வரும் ஞாயிறு இரவுப்பொழுதுகளில் தெரிய வரப்போகிறது! அதை உங்களில் ஒருவனாக, உங்களுடன் இருந்தே நாங்களும் காண ஆவலாக இருக்கிறோம்!

குறிப்பு -

இம்முறையும்  SPORTSKALM  இணையதளத்துக்காக, கீழே உள்ள ஆக்கத்தை எழுதியிருக்கிறேன்! வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்!

 

இந்தியாவின் சுப்பர் 8 வெளியேற்றம் ஒரு பார்வை

Post a Comment