Thursday, October 11, 2012

பயங்கரப் படம் + 100 நாள் விரதம் :P


INTERVIEW WITH A HITMAN

ஹிட்மன் பலருக்கு ஒரு ஹீரோ என்று சொல்லலாம்! அதுவும், ஹிட்மான் கணணி விளையாட்டுக்கள் இன்றும் கூட பிரபலம்! இதனை அடிப்படையாக கொண்டு, சில ஹிட்மன் படங்கள் கூட வந்திருந்தாலும் கூட, ஹிட்மன் எப்படி உருவானான்? அல்லது உருவாக்கபட்டான்? என்பதை ஹிட்மன் வாயிலாக படம் முழுவதும் சொல்ல வைத்து இருக்கிறார் இயக்குனர் பெரி பெண்டால்.

இந்த படம் ஆரம்பித்து, முதல் 10 நிமிடங்களுக்கு இசையும், காட்சிகளும் மட்டுமே எங்களை படத்திற்குள் அழைத்து செல்லும். ஆனால், அதை படம் முழுதும் நிலைநிறுத்தி கொள்ள இயக்குனர் எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதும் ஆச்சரியமானது! சிறுவன் ஒருவன் ஒரு பெண் சிறுமியை துப்பாகியால் சுட தயாராகுவதாக ஆரம்பிக்கும் படகாட்சி, மெல்ல அதிலிருந்து நகர்ந்து ஒரு நிருபர் தன்னைத்தானே புகைப்படம் எடுத்து கொண்டு, சில மாத்திரைகளை விழுங்கி தந்து வாகனதிற்க்குள்ளேயே மயங்கி விழ, அவர் ஒரு வீட்டிற்குள் கண்திறப்பதாக நீண்டு செல்லுகிறது! படத்தின் இடையில், ஆங்காங்கே, ஹிட்மன் கதை சொல்லும் பாணியில், சில சுவாரசியமான ஹிட்மன் காட்சிகள் கூட வைக்கபட்டிருக்கிறது!

ஹிட்மன் எப்படி உருவானான் என்று சொல்ல தொடங்குமிடத்திலிருந்து அவனின் இன்றைய நிலை வரை சொல்லுமிடத்தில்தான் இயக்குனர் சறுக்கியிருக்கிறார். ஹிட்மன் சிறுவயது கதை, ஹிட்மன் கதை என்று இரண்டு இடங்களை சொன்னவர், அதற்க்கு இடையில் சரியான இணைப்பை அலுத்தமகா சொல்லவில்லை! ஆங்கில படங்களை விமர்சிக்கும் அளவுக்கு நான் பீட்டர் இல்லையென்றாலும், அத்தகைய காட்சிகளில் இயக்குனர் அயர்ச்சி ஏற்படாத வண்ணம் காட்சிகளை அமைத்திருக்கலாம்!

ஹிட்மான் படத்துக்கு பக்கபலமே, பின்னணி இசைதான்! அதை சரிவர செய்து இருக்கிறார்கள்! ஹிட்மன் பெயர் இருப்பதால், அதுபோல ஆக்சன் படமாக இருக்குமென்று, நினைத்து படம் பார்க்க ஆரம்பித்தால் கஷ்டம்தான்! படம் முழுக்க கதை சொல்லுகிறோம் என்று ஆக்சன் காட்சிகளை காட்டாமல், மறைத்துவிட்டார்கள்! 96 நிமிடங்கள் ஓடும திரையில் என்னும் வேகம் இருந்திருக்கலாம் என்று, படம் பார்த்த பின்பு நிச்சயம் நினைக்க தோன்றும்!

100 நாள் விரதம்

எப்படியும் இன்றுடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வருவதற்கான, அனைத்து அறிகுறிகளும் தென்படுகிறது! இப்படி பார்க்க போனால், வரும் திங்கள் பல்கலைக்கழங்கள் வழமைக்கு திரும்பிவிடும்! என்ன, மாணவர்களுக்கு மட்டும் ஒரு செமஸ்டர் என்று சொல்லபடுகின்ற, ஒரு தவணை பாடங்களில் இழப்பு! அதை பற்றி யாருக்கு என்ன கவலை? எப்படியாவது, அதை திணித்து அடுத்த செமஸ்டருக்கு கொண்டு போய் விடுவார்கள்! என்ன ஒரு பயம்? அதற்குள், வேற யாராவது எதற்காவது கொடி தூக்கிவிட்டால், அதோ கதி மாணவர்களுக்கு மட்டும்தான்! வேலை நிறுத்த கால நிலுவை சம்பளம் கூட விரிவுரையாளர்களுக்கு உண்டு! அந்த சம்பளத்துக்கு அவர்கள் எப்போது வேலை செய்வார்கள்? என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்!

வேலைநிறுத்தம் எல்லோர் நலனுக்கும் என்று கூறிகொண்டாலும், அப்படி சில விடயங்கள் இருந்தாலும், அதில் யாருக்கு அதிக நன்மை என்று எல்லோருக்குமே வெளிச்சம்! என்ன செய்வது? மாணவர்கள் நிலை எதுக்காகவோ? எதுவோ? காய்ந்த கதைதான்! எப்படியும் பல்கலைக்கழகம் தொடங்கியதும், மாணவர்கள்தான் தவறு விட்டால் போல, அதிக அழுத்தம் வழங்கபடும்! அதையும் ஏற்க தயாராக பல்கலைக்கழகம் போக நாங்களும் தயாராகவே இருக்கிறம்! காரணம், படிப்புல அவ்வளவு இஷ்டம் எண்டு இல்லப்பா! இது எப்ப முடியும் எண்ட விரக்திதான்! J  
Post a Comment