Friday, December 23, 2011

குட்டி சுவரிலிருந்து....... - 03


என் சில நண்பர்கள் அநியாயத்துக்கு நல்லவர்களாக இருப்பதால், என்னையும் அப்படியே பாக்கிறார்கள். #நான்_பொறுப்பல்ல

2011இன் சாதனை - எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளவும், வழிகாட்டவும் நண்பர்கள் கிடைத்தமை......!
சோதனை - சில சாதனைகளை உரியவருக்கு சொல்ல இந்த ஆண்டில் தருணம் அமையாதமை.

இருக்கிறத பத்தி கவலையே இல்லை! புதுசா உருவாகிறது பத்தி சிந்திக்கிறதே இல்லை! #இலங்கை_தமிழன்டா

வாழ்க்கையில் உருப்பட ஒரே வழிதான் இருக்கிறது!!! நான் உருப்படுவேனா? என்று சிந்திக்காமலேயிருப்பது.........!

I HATE YOU - நான் வாழ்க்கையில் உருப்பட போகிறேன்! #மொழிபெயர்ப்பு #ரீமேக்

பெண்களின் மௌனம் நிரந்தரம் அல்ல. அது அவர்கள் பின் நாளில் குமுறுவதற்காக சேமிக்கப் படும் எனர்ஜியே!! #TWEET #சுட்டது

கொலைவெறி போன்ற பாடல்கள் பார்க்கும் பெண்களில் எல்லாம் காதல்(affection) வருவது மாதிரி! கொஞ்ச காலம் போய் திரும்பி பார்த்தால் இவள எல்லாம் காதலிக்க தோணிச்சா ? என்று இருக்கும். இளையாராஜா,ரகுமான் பாடல்கள் முதல் காதல் போல, எப்போதும் நினைக்க நினைக்க இனிப்பாக இருக்கும். #விடியலுக்கு

சில கேள்விகளுக்கு மவுனத்தை விட சிறந்த பதில் வேறு ஏதும் இல்லை!
எல்லா பிரச்சனைகளின் முடிவுக்கு பின்னரும், முதலில் யார்? எதை பேசுவது? என்று சிந்திப்பதிலையே பேசுவது தள்ளி போய் பேசாமலேயே போய் விடுகிறோம்

ஆய்வின்படி ஆண்களின் வெற்றிக்கு பின்னால் பெண்கள் இருக்கிறார்களாம். நிஜத்தில் நிறைய ஆண்களின் பிரிவுக்கு பின்னாலும் பெண்கள் இருக்கிறார்கள்(*)

ஜஸ்வர்யா ராய்க்கு எல்லாம் பொண்ணு பிறக்குது!!! நம்ம நண்பனுக்கு ஒரு பொண்ணு சிக்குது இல்லையே!!! :( #நன்பேண்டா

போராளி சசிகுமாருக்கு சிலோன் பரோட்டா மட்டும்தான் பிடிக்காதா?? இல்ல சிலோன்ல இருக்கிற எங்களையும் பிடிக்காதா??

எதுக்காகவும் எதையும் விக்குற கூட்டத்த பார்த்து இருக்கோம்!!! ஆனா, ஒரு நாட்ட எங்கயும் பார்த்து இருக்கீங்க?? #அளவானவங்க_போட்டுகொங்கோ
Post a Comment