Friday, June 17, 2011

9/11 – அமெரிக்க மறுமுகம்


அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் பின்பு வெளியாகி இருக்கும் எரிக்கின் ஆவணங்கள் அமெரிக்க வல்லரசின் இரட்டை முகத்தின் வரலாறுகள் அதிகம் பார்க்காத பகுதியை காட்டுவதாக அமைந்து இருக்கிறது. குறிப்பாக, அமெரிக்க ராணுவதளமான பெண்டகன் தீவிரவாதிகளால் தாக்கபட்ட போது, அதற்க்கு பயன்படுத்தபட்ட விமானம் போஜிங் 757 இல்லை என்பதை இந்த ஆவணங்கள் மற்றும் ஒளிப்படங்கள் மூலம் தெளிவுபடுத்தும் எரிக் அப்படியாயின், எப்படி பெண்டகன் மீதான தாக்குதல் இடம்பெற்று இருக்கும் என்பதையும் சொல்லுகிறார். அத்துடன், முக்கிய விடயம் ஒன்றையும் பெண்டகன் தாக்குதல் தொடர்பில் அவர் கேள்வியாக எழுப்பி இருக்கிறார். சாதாரணமாக, அதியுயர் ராணுவதளம் உள்ள பகுதி ஒன்றின் வான்பரப்பில் ஏதேனும் ஒரு பொருள் தென்பட்டால், விளைவுகள் எப்படி இருக்கும் என்ற அனுபவம் இலங்கையர் எங்களுக்கே தெரியாததா என்ன??? அப்படி இருக்கும் போது, வல்லரசு நாட்டின் பெண்டகனை தாக்க ராணுவ தளம் அமைந்து இருந்த பிரதேசத்துக்குள் ஒரு விமானம் வரும் போது தானியங்கி விமான எதிர்ப்பு பீரங்கிகள் என்ன செய்து கொண்டு இருந்தன? அவை எப்படியும் தானாக மோப்பம் பிடித்து இயங்கி இருக்க வேண்டுமே!!! என்று கேட்கிறார். அவரது கேள்வியின் நியாயம் எங்களுக்கே புரியும் அல்லவா??? (எவ்வளவு சத்தம் கேட்டவங்கடா நாங்க!). அமெரிக்காவின் அதியுயர் தொழில்நுட்பம் அப்பொழுது மட்டும் மவுனித்து போனதா??? என்று எரிக் கேட்கும் கேள்விக்கு அமெரிக்காவிடம் பதில் இல்லை என்பது ஆச்சரியமானது.

குறிப்பாக,செப்டம்பர் தாக்குதலுக்காக கடத்தபட்ட விமானங்களை பயன்படுத்தி மட்டுமே தனித்து இரட்டை கோபுரங்களை முழுமையாக தகர்க்க முடியாது என்று உறுதியாக கூறும் இவர். எப்படி அவை தர்க்கபட்டு இருக்கும் என்பதற்கு வலுவான காரணங்களையும் கூற தவறவில்லை. அதிலும், விமானம் ஒன்று கட்டிடம் மீது மேற்பரப்பில் மோதுகை அடையும் போது, கட்டிடம் ஒன்று, தடுமாறி சாயிந்துதான் விழும். குறிப்பாக உதாரணத்துக்கு உங்கள் மீது ஒருவர் எதிர்பாராமல் தாக்கும் போதும் கூட, நீங்கள் நிலைதடுமாறிதான் விழ சந்தர்ப்பம் உண்டு. அப்படி இருக்கும் போது, இரட்டை கோபுரம் மட்டும் எப்படி அப்படியே நொறுங்கி தரைமட்டமாக முடியும் என்று கேட்பதுடன், அதற்கான விளக்கத்தை ஜெஎப் கிங் என்ற அமெரிக்க விஞ்ஞானியை பயன்படுத்தியே அவர்கள் வழங்கிய CDயில் காணொளி மூலம் விளக்கம் கொடுக்க வைத்து இருக்கிறார்கள். அப்படியாயின் அந்த கட்டிடத்துக்கு என்ன நடந்து இருக்கும்?. அதிர்ச்சிகரமான உண்மையை அவர் சொல்லுகிறார்.

வர்த்தக மைய கட்டிடத்தின் இரண்டு கோபுரங்களிலும் உள்ள ஒவ்வரு தளத்திலும் ஒவ்வரு மூலையிலும் குண்டு வைத்து ஒரே சமயத்தில் வெடிக்க செய்து இருக்கலாம். அப்பொழுது மட்மே இரட்டை கோபுரம் விழுந்தது போல, விழுவதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதாக எரிக் தான் எழுதிய புத்தகத்தில் சொல்லி இருக்கிறார். கேட்கும் எங்களுக்கு இந்த விடயம் ஒரு கேலி கூத்தாக இருக்கும். பின்ன, அமெரிக்காவின் பிரபலமான வர்த்தக மையதுள் அவ்வளவு குண்டுகளையும் கொண்டு சென்று பொருத்துவதா? எப்படி சாத்தியம்? இப்படி வாசிப்பவர்கள் கேட்காமல் இருப்பார்களா? அதற்கும் அவரே பதில் சொல்லுகிறார்.
வர்த்தக மைய விபத்தின் போது வீடியோ காட்சிகளை முழுமையாக பார்ப்பின், எழுந்த கரும்புகை,தீப்பிழம்பு என்பன விமானம் மோதுவதற்கு சரியாக 20SEC முன்பதாகவே கட்டடத்தில் தெரிவதாக காணொளியில் ஆதாரமாக காட்டி இருக்கிறார்கள். அத்துடன் கட்டிடத்துக்குள் குறைந்தது 14தொன் வெடிபொருள் இருந்து இருக்க வேண்டும் என்று கூறும் எரிக்கும் அவரது சகாக்களும், கட்டிடத்துக்குள் வெடி பொருள் செல்வதற்கான சாத்தியப்பாடுகள்,அறிகுறிகள் விபத்து நடப்பதற்கு எட்டு நாட்களுக்கு முன்பே தெரிந்ததாக கூறுகிறார்கள். அந்த எட்டு நாட்களில் முன்பு எப்போதும் இல்லாதவாறு வர்த்தக மைய கட்டிடம் அடிக்கடி இருளில் மூழ்கியதாகவும், அதுவரை காலம் இல்லாத அளவுக்கு பராமரிப்பு, பழுதுபார்த்தல் பணிகள் இடம்பெற்றதாகவும், இதற்க்காக காவல் நடைமுறைகள் சற்று தளர்த்தபட்ருந்ததாகவும் கூறுகிறார்கள். அத்துடன், வர்த்தக மைய தாக்குதலுக்கு பின்பு அந்த இடத்திலிருந்து verumவெறும் 200 மாதிரிகளே பரிசோதனைக்கு அனுப்பி வைக்கபட்டதுடன்,மிக வேகமாக யாரும் தேடி எடுக்கக் முடியாதபடி இந்த கட்டிட கழிவுகள் அகற்றபட்டு பல்வேறு நாடுகளுக்கும் விற்பனை செய்யபட்டதாக கூறுகிறார்கள். இவாறு ஒவ்வரு உண்மைகளாக கூறும் இவர்களின் இறுதி கருத்து ஒன்றை மட்டும் சொல்லுகிறது,

செப்டம்பர் தாக்குதல் முழுக்க முழுக்க அல்கொய்தாவினால் பின்லேடன் தலைமையில் நடாத்தபட்டிருந்தாலும், தாக்குதல் முடிவுகளை மட்டும் அமெரிக்கா தனக்கு சாதகமாக மாற்றி கொள்ள பயன்படுத்தி இருக்கிறது என்று, கூறுகிறார்கள். அதாவது, கட்டிடடத்தை விமானம் மோதும் போதே, உள்ளே வைக்கபட்டிருந்த குண்டுகளை பயன்படுத்தி ஒரு துளியும் மீதமில்லாமல் வெடிக்க செய்து இருக்கிறார்கள். அத்துடன், பெண்டகன் தாக்கப்பட கூடும் என்ற நம்பிக்கையும் அமெரிக்காவுக்கு இருந்து இருக்கிறது. பெண்டகன் போன்ற வல்லரசின் ஒரு ராணுவதளம் கூட தாக்கப்ட்டது என்ற செய்தி வெளிவருமானால், உலகமே அதிரும். எனவே, அதற்கான முன்ஏற்பாடுகளை அமேரிக்கா செய்து வைத்து இருந்தது என்கிறார்கள். அதாவது, பெண்டகனை தாக்க பயன்படுத்த இருந்த விமானம்தான் பென்சிலியாவில் தவறி விபத்தில் சிக்கி இருக்கிறது. போஜிங் 757 விமானம் என்ன ஆனது என்று அறிக்கை தயாரிக்கும்வரை என்ன ஆனது? என்று தெரியவில்லை என்ற அதிர்ச்சியை தரும் எரிக் அதற்கும் மேலாக பெண்டகன் மீது சிறியளவில் தாக்கத்தை தர கூடிய விமானத்தை அமெரிக்காவே மோதி உலகத்தை தீவிரவாதிகள் செய்ததாக நம்ப வைத்து இருக்கிறார்கள் என்று அடித்து கூறுகிறார் எரிக். அதை மேலும் அவரது இணையதளத்தில் சென்று முழுமையாக பார்த்து கொள்ளுங்களேன்!


அல்கொய்தாவின் திட்டம் முன்கூட்டியே மோப்பம் பிடித்த புஷ் அரசு முன்கூட்டியே ஆப்கான் மீதும் ஈராக் மீதும் தாக்குதல் நடாத்த தான் போட்டிருந்த திட்டத்துக்கு இதனை சரிவர பயன்படுத்தி இருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள் 9/11 குழுவினர். பின்லேடன் போட்ட திட்டம் புஷ் அரசினால் பட்டை தீட்டபட்டு மிக அழகாக உலக அரங்கில் மேடையேற்றபட்டு உலக மக்களின் அனுதாபம் என்கிற பாராட்டை பெற்று கொண்டது. இந்த நாடகத்துக்காக அமெரிக்கா கொடுத்த விலைகள், செப்படபர் தாக்குதலின் போது சில பல அமெரிக்க மக்களின் உயிர்களும், அதற்க்கு பின்பு ஈராக் ஆப்கான் நாடுகளில் பல லட்சகணக்கான மக்களின் உயிர்களையும்தான்!!! தன் கபட நாடகத்துக்கு தன நாட்டு மக்களையே பகடைகாயாக பயன்படுத்தியவர்களிடம் நாங்கள் எதைத்தான் எதிர்பார்க்க முடியும்?




அமெரிக்க வல்லரசின் ஆட்சியில் வேண்டுமானால் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம். ஏற்படவும் கூடலாம். ஆனால், அந்த அமெரிக்க வல்லரசுக்கு இருக்கும் சிந்தனைகள் எப்படிபட்டவர் ஆட்சிக்கு வந்தாலும் மாற்றிவிட கூடியது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.  
Post a Comment