இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் கற்பனையே!!! கதை மட்டும் உங்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்புண்டு. அநேகமான நண்பர்கள் சிறுத்தை பார்த்து இருப்பதால் இந்த கதையில் வர கூடிய லாஜிக் மீறல்களை கண்டு கொள்ள மாட்டிங்க!!! என்று நினைக்கிறேன்.
FLASH BACK (ஒரு 20வருசத்துக்கு முன்னாடி எண்டு வச்சுக்குங்க!)
ஒரு நள்ளிரவு தாண்டிய கர்ப்பிணி பெண்ணின் பயணம். அதுவும் ஒரு காட்டு பாதை வழியே தனியான ஒரு பயணம். இந்த நேரத்தில் இந்த பாதையில் அதுவும் குழந்தை கிடைக்க கூடிய இந்த நேரத்தில் இப்படி ஒரு பயணம் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு தேவையா? என்று உங்களுக்கே கேட்க தோன்றும். ஆனால், இது ஒரு பயணம் அதுவும் தன குழந்தையை காப்பாற்ற அந்த அபலையின் பயணம் இது. சில மணி நேரங்கள் கடந்து இருக்கும். அந்த கர்ப்பிணி தாயின் நடை வேகம் மெல்ல மெல்ல குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக, அவளது வாயிலிருந்து பிரசவ வேதனையின் உச்சகட்ட வலி மெல்ல மெல்ல அந்த காட்டை அதிர வைத்து கொண்டிருந்தது. இப்போது அவளால், நகர முடியவில்லை. கீழே விழுந்து விட்டாள். இனி, அவளால் பயணம் செய்வது கடினம். கிடத்தட்ட வலியின் இறுதி கணத்தில் அந்த தாய் துடித்து கொண்டிருக்கிறாள். அந்த சமயம் அவளது கைகள் அவள் வைத்து இருந்த பையை துளாவி அந்த சிறிய கையடக்க தொலைபேசியை எடுக்கின்றன. மெதுவாக அவை அதில் ஏதோ ஒரு சில எண்களை அழுத்துகின்றன. மெல்ல மெல்ல அந்த தொலைபேசி நழுவி விழுகிறது.
NOW NOW
சேதுராமன் அந்த ஊருக்கு ஒருகாலத்தில் எமனாக இருந்தவர். இப்போது அவர்தான் அந்த ஊருக்கே கடவுள் போல வாழ்ந்து வருகிறார். மிக சிறிய குடும்பம் அவருடையது. ஒரு மகள், ஒரு மகன், ஒரு மனைவி. இப்படியான ஒரு குடும்பதிற்குதான் உலகநாதன் ஒரு காவலனாக இருந்து அவர்களை காத்து வருகிறார். சேதுராமன் எமனாக இருந்த காலத்தில் தப்பிய யாரும் இப்போது அவருக்கு எமனாக வந்து விட கூடாது என்ற ஒரே நோக்கில் உலகநாதன் காவலனாக அவர்களையே வலம் வந்து கொண்டிருக்கிறான்.
இத உலகநாதன் யாரு??????
இப்போது உலகநாதனுக்கு 22 வயதாகிவிட்டிருந்தது. அவன் சேதுராமன் வீட்டில் ஒரு காவல் தொழிலாளி. கிட்டதட்ட படித்து முடித்த பின்பு அவன் விரும்பி ஏற்று கொண்ட தொழில் இதுதான். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? அவன் இப்படி நன்றாக படித்து இருந்தும் கூட பல்கலைகழகம் செல்லாது ஏன்? இந்த தொழிலை ஏற்று கொண்டான். என்று அவன் அன்னையை தவிர யாருக்குமே தெரியாது. சேதுராமன் வீட்டில் அவர் வீட்டுக்கு மட்டுமில்லாது அவருக்கும், அவர் குடும்பதுக்குமே கூட அவன் ஒரு காவலன் போலவே இருந்து வந்தான். அப்போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது.
அன்று ஒருநாள் சேதுராமன் குடும்பமாக திருவிழாவுக்கு சென்ற வேளையில் அவருக்கு தெரியாமலேயே அவரது மனைவியின் தங்க ஆபரணங்களை ஒருவன் திருடி விடுகிறான். இதை காவலுக்கு வந்த உலகநாதன் பார்த்து விட, அந்த திருடனை அப்போதே பிடித்து அவனை அடித்து சேதுராமனிடம் ஒப்படைத்து விடுகிறான். அப்போது சேதுராமன், “ஏன்டா நகையை திருடினாய்??” என்று கேட்க, அவனோ, “நான் உன் மனைவியின் நகையை திருட வரவில்லை. உண் மகளின் நகையைதான் திருட வந்தேன். நீ கெட்டவனாக இருந்த காலத்தில் இப்படிதான் என் மகளின் நகையை திருடிவிட்டு வந்து விட்டாய், அதற்க்கு பதில் நான் உன் மகளின் நகையை திருடி, உனக்கும் அந்த சோகத்தை தர நினைத்தேன் ஆனால், மாறி நடந்து விட்டது. எப்படியும் நினைத்ததை சாதிப்பேன்!” என்று சொல்லி கொண்டே, தப்பி ஓடி விட்டான்.
எப்படியும் மகள் பல்கலைகழகம் போனால், அந்த திருடன் இலகுவாக நகையை திருடி விடுவான். எனவே, பல்கலைகழகம் செல்ல கூடிய தகுதி இருந்த உலகநாதனையும் பாதுகாப்புக்காக மகளுடன் பள்ளிகூடம் அனுப்பி வைக்கிறார் சேதுராமன். உலகநாதன் சேதுராமன் மீது வைத்து இருந்த பாசம் காரணமாக அவரின் மகள் சுருதியை யாரும் நெருங்கா வண்ணம் பாதுகாத்ததுடன், அவனும் அவளுடன் பேசாமல் இருந்து வந்தான். இது சுருதிக்கு மிக கஷ்டமாக இருந்தது. தன்னுடன், யாரும் நெருங்கி பழகுவதை உலகநாதன் தடுப்பதால் தனிமையில் இருப்பதாக உணர்ந்த சுருதி பெண்கள் கழிவறையில் இருந்து அழுது கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த மகிஷா என்ற பெண் இவளது சோக கதையை கேட்டு அவளுக்கு ஒரு ஐடியா சொன்னாள். அதாவது, “அவனுக்கு வேறு ஒரு பெண் அழைப்பு எடுப்பது போல, வேறு ஒரு எண்ணிலிருந்து எடுத்து அவனையும் காதலிக்க வைத்து விட்டால், அவன் வழிக்கு வந்து விடுவான் என்று சொல்லுகிறாள். உடனேயே, சுருதி அன்று இரவே, வேறு ஒரு சிம் வாங்கி அதிலிருந்து மெல்ல மெல்ல ஊலகநாதனுடன் கதைத்து கதைத்து ஒருவாறு அவனை காதலிக்க வைக்க நினைத்த போதும், உலக நாதன் என்ன அந்தளவுக்கு குரல் கண்டு பிடிக்க தெரியாத முட்டாளாக இருக்க மாட்டான் என்று தெரிந்து கொண்ட சுருதி அவனுக்கு AIRTEL வழங்கும் இலவச SMS சேவையை பயன்படுத்தி காதல் செய்தி அனுப்பியது மட்டுமில்லாது தானும் காதலிக்க தொடங்கிவிடுகிறார். ஆனால், உலகநாதனுக்கு தான் காதலிப்பது சுருதியைதான் என்பதை அவளது SMSஜ வைத்து கூட கண்டுபிடிக்க முடியாமல் யார் அந்த பெயரில்லாத பெண் என்று தேடி கொண்டிருக்கிறான். ஆனால், எப்படியோ இந்த விடயம் செதுராமனுக்கு தெரிய வந்து விடுகிறது.
அவர் உலகநாதனின் அம்மாவை அழைத்து இதற்க்காகவா? உன் மகன் என் வீட்டுக்கு காவலனாக வந்தான் என்று கேட்க, அவன் அம்மா அன்று FLASH BACKஇல் விட்ட இடத்திலிருந்து தொடந்தார்...................
அந்த நழுவிய கைத்தொலைபேசியில் DIALOG SIM போடபட்டு இருந்தது. அதை பயன்படுத்தி, அந்த பெண் emergency alert smsயை அனுப்பி வைக்க sms மாறி சேதுராமன் கைக்கு போக அவர் வந்து அவளை மட்டுமில்லாது அவளது குழந்தையையும் காப்பாற்றி அந்த குழந்தைக்கு உலகநாதன் என்று பெயர் வைத்ததாகவும், அந்த நன்றிகடனுக்காகவே அவன் சேதுராமனுக்கு காவலனாக வந்ததாகவும் சொல்லுகிறாள். ஆனால், இதில் நம்பிக்கை இல்லாத சேதுராமன் தான் தற்போது பாவிக்கும் AIRTEL சிம்மை பயன்படுத்தி free sms மூலம் 25 ரவுடிகளுக்கு உலகநாதனை அடித்து இழுத்து வர சொல்லுகிறார்.
அதற்குள் பல்கலைகழகத்திலிருந்த சுருதியின் AIRTELசிம்முக்கும் அந்த sms வந்து விட எப்படியும் உலகநாதனை காப்பாற்றி விட வேண்டும் என்று சிந்தித்து அவனுக்கு பெயர் தெரியாத பெண் எடுக்கும் இலக்கத்திலிருந்து நான் உன்னை பார்க்க வேணும்? ரெண்டு பெரும் சேர்ந்து ஓடி விடலாம். நீ சரியாக புகையிரத நிலையத்துக்கு வா! என்று சொல்லி SMS அனுப்பி விடுகிறாள்.
SMS வந்ததுதான் தாமதம் எப்படியும் தனது காதலியை பார்த்து அவளுடன் சேர்ந்து விட வேண்டும் என்ற நோக்கில் புகையிரத நிலையம் சென்ற உலகநாதனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!!! அங்கு சேதுராமனின் மகள் சுருதியும், மகிசாவும் அங்கே நின்று கொண்டு இருந்தனர். சுருதி தனது காதலை சேர்த்து வைக்கத்தான் மகிசாவை அழைத்து வந்து இருக்கிறாள் என்று நினைத்தவன் அப்போது புறப்பட இருந்த புகையிரதத்தில் சுருதி சொல்ல வந்ததை கேட்காமல், மகிசாவின் கையை பிடித்து இழுத்து அந்த புகையிரதத்தில் ஏறி கொண்டான்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத சோகத்தில் சுருதி நின்று கொண்டிருக்க , மூஞ்சுறு போக வழி இல்லாத போதும் அது கொண்டு போன விளக்குமாறு கொண்டு போக இடம் கிடைத்த மகிழ்ச்சியில் மகிஷா உலகநாதனுடன் புகையிரதத்தில் பயணம் செய்ய.... தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போன கதைதான் என்று மறைந்து இருந்து பார்த்து கொண்டிருந்த சேதுராமன் தன் மகள் தப்பி விட்டாள் என்று சிரித்து கொண்டிருக்க...................
இதுக்கு பிறகு என்ன நடந்து இருக்கும் என்று நானே எழுதி நீங்க படிக்கனுமா??????
-சுபம்-
குறிப்பு :- கடந்த பதிவில் சொன்னது போல காவலன் தொடர்பில் எந்த பதிவும் எழுதும் எண்ணம எனக்கு இல்லை. அடுத்த பதிவு எழுத முடியுமாக இருந்தால் சந்திப்போம்.